பக்கம்:தாயுமானவர்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் குறிப்புகள் & 119 & ஒர் உடலின் மூலம் தன் இயல்பை விளக்குகின்ற ஆன்மா சீவான்மா என்ற பெயர் பெறுகின்றது. உடல் உண்டாவதற்கு ஐம்பூதங்கள் முற்றிலும் இன்றியமையா தவை. ஆகாயம் நான்கு பூதங்கட்கு இருப்பிடமாகின்றது. நான்கு பூதங்கள் சேர்ந்து உடல் உண்டாவதற்குத் துணை புரிகின்றன. சீவான்மாக்களைப் பொதுவாக நிலைத்திணை (சரம்), இயங்கு திணை (அசரம்) என்று இரண்டு பிரிவுகளா கப் பிரிக்கின்றோம். கல்நிலையிலிருந்து முற்றிலும் பரிபக்கு வம் அடைந்துள்ள நிறை மனிதன்நிலைவரை எண்ணற்ற சிவகோடிகள் உள்ளன. அவற்றை அளந்து காட்ட எவராலும் இயலாது. இயற்கையின்கண் வெவ்வேறு இடங்களில் வெவ் வேறு பாங்குடைய சீவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவை யாவற்றையும் தொகுத்து அடிகள் அதனுள் அசர பேதமான யாவையும் வகுத்து' என்று கூறுகின்றார். வாழ்க்கை என்னும் போராட்டத்தில் உயிர்கள் படிப்படி யாக அறிவை வளர்த்து வருகின்றன. வாழ்க்கையில் போட்டி யும் போராட்டமும் இல்லையாயின் அறிவு வளர்ச்சிக்கு இடம் இல்லாது போய்விடும். அறிவு வளர்ச்சி ஏணியில் மேலான நிலையில் இருப்பவன் மனிதன். தனது அறிவை முன்னிட்டே உயிர் வகைகளுள் அவன் சாலச் சிறந்தவன் எனக் கருதப் பெறுகின்றான். இக்கோட்பாட்டை அடிகள் 'நல்லறிவையும் வகுத்து' என்ற தொடரில் அமைத்துக் காட்டு கின்றார். மனிதனைத் தவிர ஏனைய உயிர்கள் தாம் பெற்ற அறிவு அநுபவத்தைத் தங்களுடைய இயல்பாக மாற்றித் தம் வழி வருவோரினிடத்து வழங்குகின்றன. ஆனால், மனிதனோ இந்த ஏற்பாட்டில் மற்ற உயிர்களிடத்தினின்றும் மாறுபட்ட வன் ஆகின்றான். மனிதர்கள் எல்லார்க்கும் ஒரேவித இயல்பு வந்தமைவதில்லை. விலங்கின் இயல்புடைய மக்கள் உளர்; பறவையின் இயல்புடைய மக்களும் காணப்படாமல் இல்லை; எத்தனைவித உயிர் வகைகள் உலகில் உள்ள னவோ அத்தனைவித இயல்புகளை மனிதனிடத்தில் காண லாம். அதற்குமேல் மனிதன் தன் அறிவினை நூல்களாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/139&oldid=892130" இலிருந்து மீள்விக்கப்பட்டது