பக்கம்:தாயுமானவர்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哆 126 ° தாயுமானவர் செல்லும். இங்ங்னமாகப் புத்தி தத்துவமாகிய சக்கரத்தில் மீண்டும் மீண்டும் சுழன்று சுழன்று இறைவனை நோக்கி மேற்செல்லாது உயிர் வருந்தும். அதாவது மேற்குறிப்பிட்ட பாவகங்கள் சக்கரத்திலுள்ள ஆரைக் கால்கள்போல் விரை வாக மாறிமாறி வருதலின் உயிர் (ஆன்மா) இப்பாவகங்களில் அழுந்தி இன்பம், துன்பம், மயக்கம் (சுகம், துக்கம், மயக் கம்) என்பவற்றை அடையும். பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை தப்பிப் பிழைக்க முடியாத நிலையை எய்துதல்போல, புத்தியின் சுழலில் அகப்பட்ட உயிர் உய்தல் அரிது என்ப தைக் காட்டுகின்றார் அடிகள். மணிவாசகப் பெருமானும், 'அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டு இங்குஅறிவின்றி விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு 2 وو என்று கூறியிருப்பது ஈண்டு சிந்திக்கத்தக்கது. இப்பாவகங்களில் நல்லவை நான்கும் சாத்துவிகக் குணத் தால் உளவாவனவாகும். அவைராக்கியம் ஒன்றே இராசத குணத்தால் உளதாவது. ஏனைய மூன்றும் தாமத குணத்தால் உளவாவன. சாத்துவிகத்தால் இன்பமும், இராசதத்தால் துன் பமும், தாமத்தால் அவ் விரண்டுமின்றியிருக்கும் மயக்கமும் உள்ளனவாம் என்பது அறியப்படும். அகங்காரம்: புத்தி தத்துவத்தினின்றும் இராசத குணம் மிக்குடைய அகங்காரம் என்னும் தத்துவம் தோன்றும். இஃது ஆன்மா 'யான் இதனைச் செய்வேன்' என்று அகங்கரித்து எழுச்சியுறுவதற்குக் கருவியாகும். இது யான் என்றும் என து என்றும் செருக்கினை விளைவிப்பதால் இதனை மதயா னையாகவும் உயிர் இதன் வாயிற் கரும்பாகவும் கருதுவர் அடிகள். 2. திருவா. கண்டடத்து - 8 தாயு-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/146&oldid=892138" இலிருந்து மீள்விக்கப்பட்டது