பக்கம்:தாயுமானவர்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனத்தின் இயல்புகள் & 127 & "ஆங்காரம் என்னுமத யானைவா யிற்கரும்பாய் ஏங்காமல் எந்தைஅருள் எய்தும்நாள் எந்நாளோ?” - எந்நாட். தத்துவ முறைமை 9 என்ற பாடலைக் காண்க. அடுத்து பிறிதொரு பாடலில் (மெளனகுரு - 9) ஆங்கா ரத்தின் இயல்பைத் தெளிவாக விளக்கியுள்ளார். "ஆங்கார மானகுல வேடவெம் பேய்பாழ்த்த ஆணவத் தினிலும்வலிதுகாண்; அறிவினை மயக்கிடும்; நடுஅறிய வொட்டாது; யாதொன்று தொடினும்அதுவாய்த் தாங்காது மொழிபேசும், அரிகரப் பிரமாதி தம்மொடு சமானமென்னும்: தடையற்ற தேரில்அஞ் சுருவாணி போலவே தன்னில்அசை யாதுநிற்கும்; 'ஈங்கார் எனக்குநிகர்? என்னப்ர தாபித்து இராவனா காரமாகி இதயவெளி எங்கணும் தன்னரசு நாடுசெய் திருக்கும்;இத னொடெந்நேரமும் வாங்கா நிலாதடிமை போராட முடியுமோ? மெளனோப தேசகுருவே!" என்பது இப்பாடல். இந்த அகங்காரம் இன்னதென்பதைத் தவத்திரு சித்பவானந்த அடிகள் மிக அற்புதமாக விளக்குவர். எடுத்துக்காட்டொன்றாலும் தெளிவுபடுத்துவர். அகங்கா ரத்தை தேங்காயின் நாருக்கு ஒப்பிடுகின்றார். இந்த நார் தேங்காய் குரும்பையாக இருக்கும் பொழுது அதனைப் பாதுகாத்து அதன் வளர்ச்சிக்கு உதவுகின்றது. ஆனால், தேங்காயைப் பயன்படுத்தும் பொழுது அந்த நார் தேங்கா யைத் துய்ப்போருக்கு இடைஞ்சலாக அமைகின்றது. அதனை உரித்தெடுப்பதற்குத் தக்க ஆயுதம் பயன்படுத்த 3. சுவாமி சித்பவாநந்தர் - மெளன குருவணக்கம் - பக்.145-147

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/147&oldid=892139" இலிருந்து மீள்விக்கப்பட்டது