பக்கம்:தாயுமானவர்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனத்தின் இயல்புகள் భీ 131 శ மக்கள் இவ்வுலகில் வாழும் வாழ்வு இருமைகள் நிறைந்: தது; இரவும் பகலும் காலத்திலுள்ள இருமைகள்; மலையும் மடுவும் இடத்திலுள்ள இருமைகள். வெற்றியும் தோல்வி யும், மகிழ்ச்சியும் துக்கமும், போற்றுதலும் துற்றுதலும், புகழ்ச்சியும் இகழ்ச்சியும், இன்பமும் துன்பமும், விருப்பும் வெறுப்பும் . இப்படி எண்ணற்ற இருமைகள். மற்றும் தற்பெருமை, தளர்வு என்று இங்ங்ணம் இரண்டு விதமான ஒரங்களில் மனம் சார்ந்து விடும்பொழுது அது நடுவுநிலையி னின்றும் பிறழ்ந்து விடுகின்றது. மகிழ்ச்சியில் மூழ்கி விடுகின் றவனும் துன்பத்தில் மூழ்கி விடுகின்றவனும் நடுவுநிலைமை பிறழ்ந்தவனாகின்றான். இவற்றிற்கெல்லாம் அகங்காரமே காரணமாகின்றது. இருமைகட்கு அடிமை ஆகிவிடாமல், இன்பத்திற்கும் துன்பத்திற்கும் விருப்புக்கும் வெறுப்புக்கும் ஆள் ஆகிவிடாமல், வெற்றி தோல்வி இவற்றில் கட்டுண்டு கிடக்காமல் நடுவுநிலை வகிக்கும் தராசு எடையை உள்ளபடி குறித்துக் காட்டும் முள்போல் மனத்தை இரண்டு எல்லைகட் கும் ஒரம் சாரவொட்டாமல் நடுவுநிலையில் வைத்துப் பழகு கின்றவனே நல்லறிவு படைத்தவனாகின்றான். விவேகம் அவ ளிைடத்துப் படிப்படியாக ஓங்குகின்றது. ஆனால், நல்லறிவு வளர்ச்சிக்கு தடையாயிருந்து மனத்தடுமாற்றத்தை உண்டு பண்ணுவது அகங்காரம். இதனைத்தான் நடுவறிய வொட் டாது' என்கின்றார். நடுவறிதலைப் பற்றிய மற்றொரு கோட்பாடும் உண்டு. மானிட வாழ்வில் பிள்ளைப் பருவத்திலிருந்து கிழப்பருவம் வரையில் நடுவாயிருப்பது ஆன்ம சொரூபம். விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று அவத்தைகட்கும் நடுவாயி ருப்பது ஆன்ம சொரூபம். போக்குவரவு முதலியவற்றில் தட்டுப்படாது நடுவாயிருப்பது ஆன்மா. ஆனால், அகங்கா ரம் குறுக்கிடுவதால் அந்த நடுநிலையைச் சாதகன் அறிந்து கொள்ள முடியாதவனாகி விடுகின்றான். அகங்காரம் சூழ்நிலைக்கு ஒப்ப விதவிதமான வடிவு எடுக்கின்றது. இதனை முன்னிட்டுச் சீவனுக்கு வருகின்ற வெறியோ மிகக் கொடியது. தான் பிறந்த நாடு, தான் பேசும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/151&oldid=892144" இலிருந்து மீள்விக்கப்பட்டது