பக்கம்:தாயுமானவர்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 134 & தாயுமானவர் அறிந்து கொள்ள முடியாது. இராவணன் இல்லையெனில் இராமாயணமே இல்லை." அவன் பத்துத் தலைகளையும் இருபது கைகளையும் உடையவன். தன் விருப்பம் போன்று ஒன்று, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டுப் பத்து வரை யில் எத்தனை தலைகளுடன் வேண்டுமானாலும் அவன் தன்னைத் தோற்றுவித்துக் கொள்ள முடியும். விரும்பியவாறு வடிவமும் எடுத்துக் கொள்ள வல்லவன். கொடிய அகங்காரத் துடன் கூடிய மனம் இராவண சொரூபம் படைத்தது. அடி கள் இராவணாகாரம் என்கிறார். 'இராவணாகாரம்’ என்பது இராவண வடிவம் என்பது பொருள். மனம் ஞானேந்திரியங் கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து ஆகப் பத்து இந்திரியங்க ளையும் தனித்தனியாகவும் தொகுத்தும் பயன்படுத்த வல் லது. பத்து வரையில் எத்தனை தலைகளுடன் வேண்டுமானா லும் தோன்றவல்லவன் இராவணன் என்ற கருத்து இதுவே யாகும். இராவணனுடைய தலைகளை வெட்ட வெட்ட அவை புதிய வடிவத்துடன் முளைத்துக் கொண்டே போகின் றன. அகங்காரத்தின் போக்கும் அத்தகையது, விவேகத்து டன் ஆன்ம சாதகன் அதனை அழித்துக் கொண்டே போனா லும், அகங்காரம் புதிய புதிய வடிவங்களை எடுத்துக் கொண்டே போகின்றது. மனத்தின் திறமைக்கு எடுத்துக்காட் டாக இருபது கைகள் வரை அந்த அரக்கனுக்கு அமைந்துள் ōif 3ýf. மனம், விழிப்பு, கனவு, சுழுமுனை ஆகிய மூன்று நிலைகளிலும் ஆட்சி புரிகின்றது. இராவண வடிவமாக மனம் கருதப்படும்பொழுது மூவுலகிலும் அதன் ஆட்சி செல்லுகின் றது என்று சொல்லப் பெறுகின்து. தன்னிடத்து எல்லா ஆற்றலும் உள்ளது என்றும், தனக்கு நிகராக வேறு யாரும் இல்லையென்றும் இராவணன் சொல்லிக் கொண்டதைப் போன்றே அகங்காரத்தினையுடைய மனமும் பகர்கின்றது. 6. இராவணனின் சிறப்பால்தான் இராமனின் சிறப்பு ஓங்கி நிற்கிறது என்று ஒரு சமயம் 1977 - திருப்பதி இராமாயணக் கருத்தரங்கில் ஆந்திரப் பேரறிஞர் பெசவாடா கோபால ரெட்டி கூறியது நினைவுக்கு வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/154&oldid=892147" இலிருந்து மீள்விக்கப்பட்டது