பக்கம்:தாயுமானவர்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனத்தின் இயல்புகள் & 139 & கின்றது. நான் இறைவனுடைய அடியான்; நான் இறைவ னுக்கு உரியவன்' - ஒரு மனிதன் தன்னை இப்படி அகங்க ரிப்பானாகில் அதில் கேடு ஒன்றும் விளைவதில்லை." இது பழுத்த அகங்காரம். பழுக்காத அகங்காரம் வீண் கர்வம் படைத்தது. ‘என்னை யார் என்று தெரியுமா? உன்னை ஒரு கை பார்க்கின்றேன், பொறு' - இப்படிப் பகர்வது அதன் இயல்பு. அது மனிதனை புதிய பாசங்களில் ஆழ்த்துகின்றது. அகங்காரம் என்ற ஒன்று மனிதனிடம் அமையாவிடின், அவன் எந்தச் செயலிலும் செல்லுவதற்கு எழுச்சியற்றவ ாைகி விடுவான். இது சாத்துவித அகங்காரம், இராசத அகங்கா ரம், தாமத அகங்காரம் என மூன்றாகி நிற்கும். இவற்றுள் சாத்துவித அகங்காரம் தைசதாகங்காரம் என்றும், இராசத அகங்காரம் வைகாரிகாகங்காரம் என்றும், தாமத அகங்காரம் பூதாதி அகங்காரம் என்றும் பெயர்களைப் பெறும். மனம்: இந்த அந்தக்கரணம் தைசதாகங்காரத்தினின்று முதற்கண் தோன்றும். இது புறக்கருவிகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளால் கவரப்பெற்று ஊறு, சுவை, உருவம், நாற்றம், ஓசை என்னும் புலன்களை ஆன்மா பற்றுதற்கும், பின் புத்தி தத்துவத்தால் அறுதியிடப் பெற்றவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுவதற்கும் உரிய கருவியாகும். முன்பு புத்தி தத்துவத்தால் அறுதியிடப் பெற்ற பொருளின் பெயர், சாதி, குணம், கன்மம், உடைமை என்ப வற்றின் நினைவு மனத்தின்கண் தங்கிக் கிடப்பதால் அப்பொ ருளேயாயினும், அதனோடு ஒருங்கொத்த அவ்வினப் பொரு ளாயினும் மீளவும் புறக்கருவிகட்குப் புலனாகும்பொழுது "இஃது இன்ன பொருள் போலும் எனப் பொதுவாக நினைத் தும் பின் "இஃது இப்பொருள் தானோ? அன்றோ?' என ஐயுற்றும் நிற்கும். இஃது இன்ன பொருள் போலும் எனப் பொதுவாக நினைத்தல் சங்கற்பம் என்றும், அஃது ஆமோ? 8. வைணவர்கள் இந்த உறவினை ஸ்வஸ்வாமி (சொத்தும், சொத்துக்குரியவன்) உறவு என்று கூறுவர். 9. சுவாமி சித்பவானந்தர், மெளனகுரு வணக்கம் - பக்கம் 5 காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/159&oldid=892152" இலிருந்து மீள்விக்கப்பட்டது