பக்கம்:தாயுமானவர்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 14O 哆 தாயுமானவர் அன்றோ?' எனக் கவர்த்து நிற்றல் விகற்பம்' என்றும் வழங்கப்பெறும். இவற்றுள் பின்னது ஐயம் என்றாலும், முன்னதும் ஐயத்தின்பாற்பட்டதேயாகும். ஆகவே, சங்கற்ப விகற்பங்களால் ஐயுற்று நிற்கும் கருவி மனமே என்பதும் மனம் இங்ங்னம் பற்றி நின்று ஐயுற்ற பொருளைப் பின்னர் புத்தி இன்னதெனத் துணியும் என்பதும் நாம் ஈண்டு அறிந்து தெளிய வேண்டியவையாகும். இன்னோர் உண்மையும் நாம் உளங்கொள்ள வேண்டிய தாகின்றது. முன்னர் அறியப்பெற்ற பொருளையே பின்னர்க் கான நேரிடுங்கால் முன்னர் ஐயம் தோன்றிப் பின்னர் துணிவு பிறக்கும். அவ்வாறன்றிப் புதிதாக ஒரு பொருளைக் கான நேரிடின் 'இது யாது? என்ற அவாய் நிலையன்றி ஐயமும் துணிவும் தோன்றா. அப்பொழுது அப்பொருளை அறிந்தான் ஒருவன். இஃது இன்னது' என்று அறிவித்தவழி துணிவு பிறக்கும். சிலசமயம் புத்தி தத்துவம் ஒரு பொருளை மற் றொரு பொருளாக மாறித் துணிதலும் உண்டு. இது துணிவு அன்று; திரிவு (விபரீதம்) என்பது அதன் பெயர். புத்தி நன்மை, தீமை என்ற இரண்டற்கும் பற்றுக் கோடாதலின் திரிபு அதன்கண் குற்றமாய் நின்று, பிறகு மெய்ம்மையால் போக்கப் பெறும். அந்தக்கரணங்களின் தோற்றம் 'சித்தம், புத்தி, அகங்காரம், மனம்’ என்றாலும், அதனை மனம், புத்தி, சித்தம், அகங்காரம்' என்று கூறுதலே முறையாய் உள்ளது. அதற்குக் காரணம் என்ன? ஐம்பொறிகளால் அறி யப்பெற்ற பொருளை மனம் முதற்கண் பற்றி ஐயுறுதலும், அதன் பிறகு புத்தி ஐயத்தின் மறுதலையாகிய துணிவைச் செய்தலும், அதன் பின்னர்ச் சித்தம் புத்தியால் துணியப் பெற்றவற்றை மீளமீளச் சிந்தித்து இன்பதுன்பங்களை எய்து வித்தலும், அகங்காரம் எல்லாவிடத்தும் 'யான் இதனை ஆராய்வேன், இதனைத் துணிவேன், இதனைக் கொள்வேன் அல்லது புறக்கணிப்பேன்’ என இம் முறையில் செயற்படு தலே யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/160&oldid=892154" இலிருந்து மீள்விக்கப்பட்டது