பக்கம்:தாயுமானவர்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ 156 శః தாயுமானவர் 'பொன்னிலே பணிபோன்ற மாயை தரும் மனமே, உன் அறிவை ஆராய்ந்தால், நீ திருவருளுக்கு ஒப்பாவாய். குற்றங் கள் தீர்ந்து நீ என்னை அடைந்தால், நான் உய்வேன். உன்னைப்போல் எனக்குத் துணையாவார் ஒருவரும் இலை; என் உயிர்க்கு சிறந்த உறவுமாகின்றாய் (மண்டலத்தின் 8). உடலை எடுத்த நான்முகனும் உன்னைத் தவிர்க்க முடியாது. உன்னை அசத்து என்று சொல்லேன்; சத்து என்றே வாழ்த்து வேன். என்னோடு பழகிய நீ எனைப் பிரிந்த துயரத்தினால் இறந்து தென்புலம் சேர்ந்தாலும் அத்திசையைப் பூரணமாய் வணக்கம் செய்வேன். (மேலது 9) 'ஆண்டகுரு மெளனிதன்னால் யான்எனது அவனருள் நான் அற்று வேன்” (மேலது - 10) - என்னுடைய குருவின் அருளால் நான் 'யான், எனது' என்ற அகங்கார மமகாரம் இரண்டும் அற்று அவன் அருள் வடிவாக விளங்குவேன்.' ぶ。

      • ** ふ め 々? ** * P,* a பூவில் காண்தகஎண் சித்முத்தி எனக்குண்டாம்; (மேலது 10)

இன்னும் 'உன்னுடைய வள்ளண்மைக்கு காரேனும் கற்பகப் பூங்காவேனும் உனக்கு உவமை சொல்ல முடியாது. ஏழுல கத்திலும் நின் மகிமையைச் சொல்ல முடியாது’ (மேலது - 11). மனத்தை வென்ற நிலை: அடிகள் தாம் இறைவனோடு ஒருமைப்பட்டிருந்த காலத்தில் மனத்தைத் தாம் வென்ற நிலையையும் எடுத்துக்காட்டுகின்றார். அருளே கோயிலாகக் கொண்டு பேரின்பமாய் இருந்த பரம் பொருளோடு நான் உடனிருந்தபொழுது, ஒடிப்போய் ஒளித்துக் கொண்ட நெஞ்சே, நீ முயற்கொம்போ? ஆகாயப் பூவோ? கானல் நீரோ? நீ விளங்க இருந்த இடம் எந்த இடம்? எனக்குத் தெரியவில்லையே' (ஏசற்ற: 9,10) என்கின்றார். முயற் கொம்பு முதலிய பொருள்களும் இல்பொருளுக்கு உவமை யாகக் கூறப் பெறுவனவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/176&oldid=892171" இலிருந்து மீள்விக்கப்பட்டது