பக்கம்:தாயுமானவர்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ళ 162 令 3. தாயுமானவர் உலகத்தோடு தொடர்பு கொள்ளும்பொழுது அதன்கண் பற்று வைக்கின்ற செயலுக்குக் காரணமாயுள்ளதற்கு மூல வினை அல்லது 'மூலகன்மம்' என்பர் மெய்விளக்க அறிஞர் கள். உலகின்பாற் செல்லும் உள்ளச் செயலுள்ள வரை, பன்முறை உண்மை நூல் கற்றாலும் மனக்கலக்கம் திருவ தில்லை. இந்த உண்மையினை, 'கண்டுகண்டும் தேறாக் கலக்கமெல்லாம் தீரும்வண்ணம் பண்டைவினை வேரைப் பறிக்கும்நாள் எந்நாளோ?” - எந்நாட். தத்துவமுறைமை - 18 என்று அடிகள் கூறுவர். இன்னும், 'இன்றோ இருவினைவந் தேறியது? நான்என்றோ அன்றே விளைந்ததன்றோ ஆற்றேன் பராபரமே!" - பராயரம் - 180 என்ற பராபரக் கண்ணியில் இருவினை என்பதற்கு நல் வினை, தீவினை' என்று பொருள் கொள்ளுவதைவிட மூவி னை' என்று கொள்ளல் முற்றிலும் பொருந்துகின்றது. 'நான் எப்போது உள்ளேனோ அப்போதே வினையும் ஏற்பட்டது என்று கூறியதனால் இப் பொருத்தம் அமைந்து விடுகின் றது. 'நான்' என்பதற்கு "அகந்தை (அகங்காரம்) என்று பொருள் கூறினும் பொருந்தும். அகங்காரம் எப்பொழுது உண்டாயிற்றோ அப்பொழுதே வினை வந்தது என்று கூறுவதில் பொருத்தம் தெரிகின்றதன்றோ?' 'வினைக்குக் காரணமாகிய எண்ணத்தை நீ நினைப்பித்தாலன்றி அஃது எனக்கு உண்டாவதில்லை. அவ்வாறிருக்க நான் அவ்வெண் ணம் உதிப்பதற்கு முன் செயக் கிடந்த வினை ஏது?' என்று கேட்கின்றார். 'எண்ணமுந்தான் நின்னைவிட இல்லையென்றால் யான்முனமே பண்ணவினை ஏது? பகாராய் பராபரமே!’ - பராபரம் 161 என்பதில் இதனைக் காணலாம். இதே கருத்தினை இன்னும் பல இடங்களில் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/182&oldid=892178" இலிருந்து மீள்விக்கப்பட்டது