பக்கம்:தாயுமானவர்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

KÞ வாழ்வில் வினையின் பங்கு 多 165 领 தற்காலிகமாய்ப் பெறுகின்றவர்களா? என்ற வினா எழுகின் றது. சீவர்கட்கு 'சீவபோதம் இருக்கும்வரை அவர்களுடைய அறிவும் அது மறைந்திருக்கும் நிலையும் இப்படி மாறி மாறி அமைந்து வருகின்றது. சீவர்கள் திரும்பத் திரும்பத் தவறு செய்து விடுகின்றனர். இதைத் தொடர்ந்து துக்கம் வருகின் றது. நாம் படுகின்ற துக்கத்திற்குக் காரணம் என்ன என்கின்ற வினாவை எல்லாக் காலங்களிலும் எழுப்பி வருகின்றோம். இதே வினா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பு எழுந்தது. இன்றும் எழுகின்றது; பல்லாயிரம் ஆண்டுகட்குப் பின்னரும் இவ்வினா எழுந்தே தீரும். எனவே, இது பொது வான வினா. இதற்கு விடை இல்லையா? என்று மேலும் நாம் கேட்கலாம். இதற்கு எக்காலத்திலும் விடை உண்டு. நாம் படுகின்ற துக்கத்திற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அறிவின்மை; அஞ்ஞானம். அஞ்ஞானத்தால் நாம் குற்றம் செய்கின்றோம். அஞ்ஞானம் நம்மிடம் இருக்கும் வரை நாம் குற்றம் புரிந்து வருவோம். துன்பத்தையும் அநுபவித்துக் கொண்டே இருப்போம். அறிவு நமக்குச் சொந்தமின்றிப் போய்விட்டால் அதை நாம் இழக்கின்ற பொழுதெல்லாம் நாம் குற்றத்தைச் செய்தே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்படுகின்றது. அதற்காக வருந்தியே ஆகவேண்டும் என்ற நிலையும் அமைகின்றது. உண்மையில் இத்தகைய பரிதாபக ரமான நிலையிலா மனிதன் உள்ளான்? இக்கருத்தை, எளிய னேற்கு அறிவாவது ஏது? அறிவிலா ஏதம் வரும்வகை ஏது? என்று காட்டுகின்றார். ஏதம் என்ற சொல் ஈண்டுக் குற்றம்' என்று பொருள்படுகின்றது. சீவான்மாவுக்கு அமைந்துள்ள பல பண்புகளுள் அவன் “கர்ம சொரூபம்’ என்பதும் ஒன்று. வினைவயத்தனாய் இருக் கும்வரை, அவன் 'வினை செய்து கொண்டே இருப்பான். வினைக்குத் தன்னைக் கர்த்தாவாக எண்ணுவதும் அவனு டைய இயல்பாக உள்ளது. ஒருவன் தன்னைக் கர்த்தா என்று எண்ணிக் கொண்டிருக்கும்வரை அவன் வினைப் பயனை ஓயாது வளர்த்துக் கொண்டே போகின்றான். வங்கியில் போட்ட பணம் வட்டி மூலம் அல்லும் பகலும் ஓயாது வளர்வதுபோன்று சீவான்மாவுக்கும் வினை வளர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/185&oldid=892181" இலிருந்து மீள்விக்கப்பட்டது