பக்கம்:தாயுமானவர்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

థీ * புனிதமெனும் அத்துவிதம் 令 195 * தெய்விகம் என்னும் பெரும் பேறு மனிதனுக்கு அன்னி யமானதன்று; அஃது அவனிடம் இயல்பாகவே உள்ளது. சக்கிமுக்கிக் கல்லில் தீ இருப்பது போன்று தெய்விகம் மனித னிடம் உள்ளது. சக்கிமுக்கிக் கல்லைத் தட்டித் தீயை வெளிப் படுத்துதல் போல் மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்விக நிலையைத் தோற்றத்திற்குக் கொண்டு வருவது முயற்சியின் விளைவு. இக்கோட்பாடுதான் கூடுதலுடன் பிரிதலற்று' என்று இயம்பப்படுகின்றது. இரும்பு தீமயமாய்த் திகழ்கின்ற பொழுது அதைத் தீ என்று உபசாரத்திற்குச் சொன்னாலும் உண்மையில் தி வேறு, இரும்பு வேறுதான். ஆதலால் இரும்பும் தீயும் தொந்தமானவை. ஒன்று மற்றொன்று அல்ல என்பது இதன் பொருள். ஆனால், சக்கி முக்கிக் கல்லும் அதனுள் புதைந்து கிடக்கும் தீயும் இரண்டு அல்ல. சக்கிமுக் கிக் கல் கல்லே; தி தியே. இங்ாவனமே மனிதன் வேறு, கடவுள் வேறு அல்ல. கடவுள் தன்மை மறைந்திருக்கின்ற பொழுது மனிதன் என்று பெயர் பெறுகின்றான். கடவுள் தன்மை மிளிரும்பொழுது மெய்ப்பொருள் என்னும் பெயர் வந்தமை கின்றது. ஆகவே, மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு நிர்தொந்தமாய் வேறுபடாமல் உள்ளது என்று அடிகள் இயம்புகின்றார். ஒளியும் வெப்பமும் பகலவனிடம் குவிந்து கிடக்கின் றன. அவை நாலா பக்கமும் வியாபகம் ஆகின்றபொழுது, அவை விரிவடைகின்றன. இங்ங்னமே மனிதனிடத்திலிருந்து எண்ணங்கள் ஓயாமல் கிளம்பி வந்து கொண்டிருக்கின்றன. இந்த எண்ணங்கள் உறங்கும் நிலையில் அவனிடம் குவிந்து கிடக்கின்றன. அவன் விழித்த நிலையில் உலக விவகாரங்க ளில் ஈடுபடுகின்ற பொழுது இந்த எண்ணங்கள் விரிவடை கின்றன. எண்ணத்தின் விரிவே வாழ்வு ஆகின்றது. ஆனால், மனிதன் தன்னுடைய உண்மையான சொரூபத்தை சுவாது 13. இந்தப் பாடலில் அத்வைதம் (ஏகான்மவாதம்) விளக்கப் பெறுவதுபோல் தோன்றுகின்றது. தாயுமான அடிகள் சைவத்தில் நின்று கொண்டு அத்வைதப் பார்வையைச் செலுத்துகின்றார். சிலசமயம் சமயம் கடந்த நிலையும் இப்பெரு மானிடம் காண முடிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/215&oldid=892214" இலிருந்து மீள்விக்கப்பட்டது