பக்கம்:தாயுமானவர்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శః 98 శః தாயுமானவர் அடைகின்றபொழுது மலம் என்பது அதற்கு இல்லை. இதுவே பாடலில் மலமுமற்று' என்று வருகின்றது. நமக்கு அயலதாய் இருக்கும் பொருள் ஒன்றை நாம் நாடுகின்றோம். இறைவன் நமக்கு அயலானவர் என்று எண் ணும்பொழுது, இறைவன் நாட்டம் நமக்கு உண்டாகின்றது. நாம் தேடித் திரிகின்ற தெய்வம்தான் நம் மனத்தகத்து நம் சொரூபமாகத் திகழ்ந்து கொண்டுள்ளார் என்னும் உண்மை நமக்குத் தட்டுப்படுகின்ற பொழுது நாம் அதை நாடுவதற்குப் பதிலாக நம்மை அதன் மயமாக்கி அதனிடம் கொடுத்து விடுகின்றோம். இச்செயல் நாடுதலுமற்று' என்று செய்யுளில் குறிப்பிடப் பெறுகின்றது. பூமிக்கு மேல் இருக்கும் உலகத் தைச் சுவர்க்கம் என்றும், அதற்குக் கீழ் இருக்கும் உலகத்தை (பாதாளம்) தரகம் என்றும் எண்ணுகின்றோம். பகல் பன்னி ரண்டு மணிக்கு ஒரு விமானமும் இரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு விமானமும் மேல் நோக்கிப் போவதாக இருந்தால் நாம் இரண்டையும் ஒரே திசையில் மேல்நோக்கிப் போவதாக எண்ணுகின்றோம். ஆனால், விமானங்கள் இரண்டும் எதிர்த் திசையில் செல்பவையாகின்றன. உறங்கும்பொழுது நாம் எங்கெங்கோ சென்று வந்தவர்களாக எண்ணுகின்றோம். ஆனால், உண்மையில் நாம் எவ்விடத்தை நோக்கியும் செல்ல வில்லை. இக்கருத்துகளை மேல் கீழ்நடுபக்கமென நண்ணுதலு மற்று' என்ற தொடரில் அடிகள் குறிப்பிடுகின்றார். பிரபஞ்ச முழுவதற்கும் விந்து அல்லது வித்தாக இருப் பது நாதம். இதுநாதப்பிரம்மம் என்றும் வழங்கப்படும். ஒசை, ஒலிமயமாய் இருப்பது நாதம். ஒசையினின்று உலகனைத் தும் வந்துள்ளன. எனவே, ஓசையைக் காரணம் என்றும், உலகைக் காரியம் என்றும் சொல்லலாம். ஒலியின் புறத்தோற் றமே பிரபஞ்சம். காரணம் அற்றவிடத்துக் காரியமும் இல் லாது போய்விடும். இப்பிரபஞ்சத்திற்கு ஒப்பான மெய்ப்பொ ருள் ஒன்றுமில்லை என்று நாம் எண்ணிவருவது தவறு. நாதம் ஒடுங்குமிடத்து இந்தப் பிரபஞ்சமும் இருக்குமிடம் தெரியாது மறைந்துவிடும். இப்பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ள ஒரு பெருநிலைக்கு நாம் போக முடியும். நம்மைப் பக்குவப்படுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/218&oldid=892217" இலிருந்து மீள்விக்கப்பட்டது