பக்கம்:தாயுமானவர்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புனிதமெனும் அத்துவிதம் ※ 205 ● சும்மா - ஒருசொல்: "சும்மா’ என்பதை ஒரு மொழி (ஒரு சொல்) என்று அடிகள் சிறப்பிப்பது வழக்கமாக இருப்பதை அவர் பாடல்களிலிருந்து தெளியலாம். 'பாரி ஒருசொற் படியே அநுபவத்தைச் சேரி அதுவே திறம்!” - உடல் பொய்யுறவு 10 என்பது காண்க. மேலும், 'சொன்னவொரு சொல்லால் சுகமா யிருமணமே! இன்ன மயக்கம் உனக்கேன்?” - மேலது 70 a f சொன்னஒரு சொல்லை மறவாமல் தோய்ந்தால்நெஞ் சே!உன்னால் இல்லை பிறப்பதெனக் கே' - மேலது 71 என்ற பாடல்களிலும் 'ஒரு சொல்லைக் குறிப்பிடுதல் காண லாம். ஒரு பாடலில் ஒரு மொழியின் பெருமையை விரித்து ரைக்கின்றார். “ஒருமொழியே பலமொழிக்கும் இடம்கொடுக்கும்; அந்த ஒருமொழியே மலம்ஒழிக்கும் ஒழிக்கும் எனமொழிந்த குருமொழியே மலை இலக்கு மற்றைமொழி எல்லாம் கோடின்றி வட்டாடல் கொள்வதொக்கும் கண்டாய்' - நினைவொன்று - 2 இதில் 'ஒரு சொல்லே பொருள் விரிக்கும்பொழுது பல சொல்லாலாகிய மெய்ந்நூற்கு இடம் கொடுக்கும்; அந்த ஒரு மொழியே பாசத்தை நீக்கும், குரு மொழிந்த ஒரு மொழியே மலைபோன்ற எல்லையாகத் திகழ்கின்றது. இந்த ஒரு மொழியை விட்டு மற்ற மொழிகளைக் கையாள்வது கோடுவ ரையாமல் வட்டாடல் போன்றது' என்கின்றார். 19. பாரதியார் சுயசரிதையில் ஒரு பாடல் (63) இப்படித் தொடங்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/225&oldid=892225" இலிருந்து மீள்விக்கப்பட்டது