பக்கம்:தாயுமானவர்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. சித்தர் பெருமக்கள் தியுேமானர் விராலிமலையில் தங்கியிருந்தபோது சித்தர் ஒருவர் இவர் மனநிலையைக் கண்டு சித்தர்கள் தங்கியிருந்த ஒர் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அடிகள் சித்தர்களுடன் அளவளாவியிருந்தார். இக்காலத்தில் தான் சித்தர் கணம்' என்ற பதிகம் பாடப்பெற்றதாகக் கருதலாம். சித்தி பெற்றவர் சித்தர். முத்தி பெறும் வரை உடல் வேண்டப் பெறுவது. ஆகவே, பல பிறவிகள் எடுப்பதற்குப் பதிலாக ஒரு பிறவியிலேயே காயசித்தி பெற்று முத்திக்குரிய வராதல் சிறந்ததாகும் என்பது அடிகளாரின் கருத்து. ‘தேகம்யா தேனும் ஒரு சித்திபெற சீவன்முத்தி ஆகும்நெறி நல்லநெறி ஐயா பராபரமே!- பராயரம் 357 என்பது காண்க. சித்திகள் மூவகை - உருவசித்தி, அருவ சித்தி, அருவுருவ சித்தி என்பன. 'முத்தியிலும் தேகமிசை மூவிதமாம் சித்திபெற்றோர் எத்தனைபேர் என்றுஉரைப்பது எந்தாய் பராபரமே” - மேலது 209 என்பது காண்க. தம்பிரான் தோழர் உருவசித்தி பெற்றவர் என்றும், ஞானசம்பந்தப் பெருமானும் அப்பரடிகளும் அருவுருவ சித்தி பெற்றவர்கள் என்றும், மணிவாசகப் பெருமான் அருவ சித்தி பெற்றவர் என்றும் ஆன்றோர் கருதுவர். அகண்டாகார சிவத்தின் பேரருள் பதியப்பெற்ற அன்ப ரது திருமேனி கற்பூரதீபம்போல் பொலிந்து திகழும். 'சித்த நிருவிகற்பம் சேர்ந்தார் உடல்திபம் வைத்தகர்ப் பூரம்போல் வயங்கும் பராபரமே” - மேலது 245 என்ற கண்ணி இதனை விளக்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/234&oldid=892235" இலிருந்து மீள்விக்கப்பட்டது