பக்கம்:தாயுமானவர்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர் பெருமக்கள் & 215 & சித்தி பெற்றவர்களின் உடம்பு துயதாயும் மயக்கம் பயவாத அறிவு மயமாயும் இருக்கும் என்பது அறிந்து தெளியப்படும். 'வெளியாய் அருளில் விரவும்.அன்பர் தேகம் ஒளியாய்ப் பிறங்கியதும் உண்டோ பராபரமே” - பராபரம் 19) என்ற கண்ணி இதற்கு அரணாக அமையும். பட்டினத்தடிகள் திருமேனி சீவன் மூத்தர் திருமேனிபோல் இலிங்கமாயிற்று என் பதை நாம் அறிவோம். இக்கருத்து, 'சத்தாகி நின்றோர் சடங்கள் இலிங்கம்என வைத்தாரும் உண்டே என்வாழ்வே பராபரமே” - மேலது 244 என்ற கண்ணியினால் தெளிவுறுத்தப் பெறுகின்றது. முத்தி அடைவதற்கு உடல் வேண்டும். ஆதலால் காய சித்தி முத்தியின் பொருட்டு என்றாகின்றது. எனவே, முத்திய டையும்வரை உடலின் இன்றியமையாமையை 'அறிவில் அறியாமை அற்று அறிவாய் நின்று, பிறிவுஅறஆ னந்தமயம் பெற்றுக் - குறிஅவிழ்ந்தால் அன்றைக்கு உடல்வேண்டேன், ஐயா.இவ் ஆக்கையையே என்றைக்கும் வேண்டுவனே யான்' - உடல் பொய்யுறவு 33 என்ற பாடலில் வற்புறுத்துவர். 'உலகப் பொருள்களை அறியும் அறிவும் அறியாமையும் ஒழிந்து, அருளில் நிலை பெற்று அறிவாய் நின்று சிவாநுபவம் பெற்றுத் தற்போதம் ஒழிந்த அந்த நாளில் உடல் வேண்டேன். அதுவரை இந்த உடம்பினை எப்போதும் வேண்டி நிற்பேன்’ என்பதை உணர்ந்து தெளிக. இதனையே, "சட்டையொத்த இவ்வுடலைத் தள்ளுமுன்னே நான்சகச நிட்டையைப் பெற்றுஜயா நிருவிகற்பம் காண்பேனோ' - காண்பேனோ கண்ணி 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/235&oldid=892236" இலிருந்து மீள்விக்கப்பட்டது