பக்கம்:தாயுமானவர்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ళ 216 త; தாயுமானவர் என்ற கண்ணியிலும் மொழிவர். முடிந்த முடிபாக அடிகள் உடற்சித்தியை வேண்டிற்றிலர் என்பதை, 'கற்றாலும் கேட்டாலும் காயம்.அழி யாதசித்தி பெற்றாலும் இன்பம் உண்டே பேசாய் பராபரமே” - பராபரம் 285 என்ற கண்ணியால் இனிது விளக்கமடைவதைக் காணலாம். உடல் உள்ளபோதே சீவன் முக்தி அடையாமல் உடல் நீத்தபின் உயிர் முத்தியில் சேர்தல் என்பது பொருந்தாது என்பது அடிகளாரின் கருத்து. 'உலகநெறி போல்சடலம் ஒய உயிர்முத்தி இலகும்எனல் பந்தஇயல்போ பராபரமே” - பராபரம் 358 என்றதில் இதனைக் காணலாம். தமக்கு மேற்பிறவி உண்டெனில் யோகநெறி நின்று காயசித்தி பெற்று முத்தி நாடும்படி உதவவேண்டும். பிறவி இல்லையெனில் அருட்சக்தி துணை கொண்டு உயிர் முக்தி எய்தவும் உடல் கர்ப்பூர தீபம்போல் வயங்கவும் இறைவன் அருள் புரிய வேண்டும். சச்சிதானந்தசிவம் என்னும் பதிகத் தின் ஒரு பாடலில் 'இன்னமும் பிறப்பதற்கு இடம் உண் டென்றால் இந்த உடம்பு இறவாதிருக்கும்படி மூலாதாரத்தில் உண்டாகின்ற அனலானது அமுதத்தை ஊற்றும் மதி மண்ட லத்தில் பொருந்தும்படி என் தாயாகிய குண்டலினி சக்தியினி டத்தாலே மாறுபாடு யாதுமில்லாது குழந்தைபோல் என்னை வளர்த்திடும்படி பேயேனை ஒப்புவித்தல் வேண்டும். பிற வாத நெறி எனக்கு இருக்குமாயின் இப்பிறவியிலேயே கர்ப் பூர ஒளிபோல மின்னும்படி எங்கும் நிறைந்த அருட்சக்தியா கிய பராசக்தியினிடம் வினையேனை ஒப்புவித்துவிட்டு நெறி அடைவித்தல் மிகவும் நன்று. இந்த இரண்டு வழியும் இல் லாது உலக நெறிதான் எனக்கு உண்டெனின் தன்னந்தனிய னாக இருக்கும் சிறியேன் அதனைத் தாங்கிக் கொள்ள மாட் டேன்' (சச்சி. சிவம் 9) என்று சொல்வதனைக் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/236&oldid=892237" இலிருந்து மீள்விக்கப்பட்டது