பக்கம்:தாயுமானவர்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர் பெருமக்கள் 令 221 令 அமுதத்தை நாபியின் மேலுள்ள கதிரவ மண்டலம் விழுங்கி விடுகின்றதென்றும், அதனால் நரைதிரை உண்டாகின்றதென் றும் யோக நூல் உரைக்கும். சிவராஜயோகம்: இது யோகத்தைக் கருவியாகக் கொண்டு சிவத்தியானம், சமாதி என்பவற்றை முயன்று அடைதலாகும். புருவ நடுவிலிருந்து ஆறு விரற்கிடைக் கப்பால், தலை நடுவில் (பிரம்மரந்திரத்தில்) இருக்கிற ஆயிர இதழ்த் தாமரை யைச் சிவசூரியனால் விரியச் செய்து, அத்தாமரைப் பூந்தாது விலுள்ள திங்கள் மண்டலத்தை மூலநெருப்பினால் இளக்கி அதன் அமுதத்தை எல்லா நாடிகளிலும் பரவச் செய்வதே செய்யும் முறை என்று செப்புவர். யோகத்திற்கு முத்திரை, கானம், பந்தம் முதலிய பல உபாயங்களிலும் கடவுள் தியானம் சிறந்ததாகலின், யோகத்துடன் கூடிய சிவத்தியானத் தைச் சிவராஜ யோகம் என்பர். வெறும் யோகத்திலும் சிவயோ கமே சிறந்தது. ஆதலின், 'என்றைக்கும் அழியாத சிவராய யோகமாய்' - சித்.கணம். 6 என்று குறிப்பிட்டனர் அடிகள். இந்த யோகத்தின் இயல்பினை அடிகள் சிற்சுகோதய விலாசம் 6ஆம் பாடலிலும் பாயப்புலி 28ஆம் பாடலிலும் விளக்கியுள்ளார். அவற்றை நோக்கித் தெளிவு பெறலாம். சுழுமுனை வழியாகப் பிரான வாயு முதலியன செல்லுங் காலை பலவகையான இசையொலிகள் செவிமடுக்கப் பெறும். அவற்றைத் திருமூலர், 'மணிகடல் யானை வளர்குழல் மேகம் மணிவண்டு தும்பி வளைபே ரிகையாழ் தணிந்தெழும் நாதங்கள் தாமிவை பத்தும் பணிந்தவர்க் கல்லது பார்க்க வொண்ணாதே' என்ற ஒரு செய்யுளில் அடக்கி, நமக்குத் தந்துள்ளார். இவற்றை, 3. திருமந்.மூன்.தந்தியானம் - 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/241&oldid=892243" இலிருந்து மீள்விக்கப்பட்டது