பக்கம்:தாயுமானவர்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர் பெருமக்கள் 令 227 多 'பொல்லாத வாதனை எனும்சப்த பூமியிடை போந்துதலைச் சுற்றியாடும்" - எங்கும் நிறைகின்ற பொருள் - 4 என்பது காண்க. அவை உபாதிகளையாதல் ஆணவ காரியங் களையாதல் குறிக்கும் என்பது உணரப் பெறும். இதனுள் 'சப்தபூமி' என்பதற்கு ஒலிவடிவாய நூலறிவு என்று கூறுவாரும் உளர். ஆன்மா அவத்தைகளில் மொத் துண்ணும் அவசரம்' (மெய்கண்டவிருத்தியுரை பூவை கலி யாண சுந்தரனார்). ஆணவத்தின் காரியம் ஏழென சிவஞான முனிவர் தம் சிவஞான பாடியத்தில் கூறிப் போந்தனர். அவை மோகம், மதம், அராகம், கவலை, தாபம், வாட்டம், விசித்தி ரம் என்பன. அவை முறையே பயன்கோடலும், தான் பெற்றதை மயக்கத்தால் பெரிதாக மதித்தலும், ஆசை மிகுத லும், பிரிவாற்றாமையால் கவலுதலும், கிடையாததைப் பெற விரும்புதலும், அதற்கு முயன்று வாடுதலும், பெற்ற சிற்றின் பத்தில் மனநிறைவு பெற்று, பேரின்பத்தை அவாவாமை என்பனவாம். முத்தியில் விருப்பம், நற்கேள்வி, சத்திலே மனநாட்டம், சத்துற்பத்தி, சித்தி, வெறுப்பு, பரநாட்ட மின்மை விழியா நிலை என்பன இவற்றிற்கு எதிரிடையாய ஞான பூமிகளாம். பூதம் ஐந்தினையும் மாயையையும் சகுண மூர்த்தங் களையும் உயிருக்கு அன்னியமான ஏழு தத்துவங்கள் என்று கூறி இவற்றைத் தான் எனக் கருதுதல் அஞ்ஞானம் என்பர் ஏகான்மவாதிகள். தேகம், இந்திரியம், பிராணன், மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்னும் ஏழினையும் உபாதியாகக் கொண்டு இவற்றைச் சப்தபூமி என்பாரும் உளர். இனி யோக பூமிகளை யோக வாசகத்திற் கூறியபடி கொள்ளுதல் ஏகான்மவாதக் கொள்கை. சித்தர்களுள் திருமூலர் மரபினையும், நவநாதசித்தர்களையும் அடிகள் விதந்து ஒதுகின் றார். அகத்தியர், மூலர், போகர் என்னும் மூவர் பரம்பரைக ளையே சிறந்தவை எனக் கூறுப. நவநாத சித்தள் என்ற தொடர் மெளனகுரு 7ஆம் பாடலில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/247&oldid=892249" இலிருந்து மீள்விக்கப்பட்டது