பக்கம்:தாயுமானவர்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哆 228 哆 தாயுமானவர் 'நவநாத சித்தர்களும்உன் நட்பினை விரும்புவார்’ என்ற அடியிலும், கருணாகரக் கடவுள் 7ஆம் பாடலில், 'எண்ணரிய கணநாதர் நவநாத சித்தர்கள்' என்ற அடியிலும் வந்துள்ளமை காணத்தகும். நவநாத சித்தர்கள் என்போர் யோகத்தினால் சுழு முனை யில் உணடாகும் நாதத்தில் மனத்தை வைத்துச் சமாதியடைந் தவர்கள் என்றும், அதனால் மரணத்தை வென்று பிரம்மாண் டவெளியில் உலாவுகின்றவர்கள் என்றும் அறிகின்றோம். நவநாத சித்தர் என்போர் ஆதிநாதர், சத்தியநாதர், சதோகநா தர், வகுளி நாதர், மதங்க நாதர், மச்சேந்திர நாதர், கடேந்திர நாதர், அநாதி நாதர், கோரக்க நாதர் என்பவர்கள் ஆவர். சித்தர்களைக் கூறும் முகத்தான் யோகத்தின் இயல்பினை அடிகள் அறிவுறுத்தினர். ஏனைச் சரியை, கிரியைகளையும் அடிகள் தழுவியுரைத்தவற்றை பிறிதோரிடத்தில் காட்டு வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/248&oldid=892250" இலிருந்து மீள்விக்கப்பட்டது