பக்கம்:தாயுமானவர்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& ஆசாரியனின் அருமை 哆 23± 多 எல்லா விதமான முன்னேற்றமும் உண்டு. குருபக்தியில் முதிர்ந்த நிலையில் இருக்கும் அடிகள் தம்மை ஆட்கொண்ட குருவையும் தட்சிணாமூர்த்தியையும் ஒன்றாகக் கருதியது முற்றிலும் பொருத்தமானது. சீடன் ஒருவன் குரு இடத்தில் எத்தகைய பக்தி கொள்ள வேண்டும்? நின்னைக் கும்பிட்டு அனந்த முறை தெண்டனிட் டு என்ற அடிகளின் பாடல் தொடர் இதனைச் செவ்விதின் விளக்குகின்றது. வீழ்ந்து வணங்குவதன்மூலம் சீடன் ஒரு வன் தனது சீவபோதம் முழுவதையும் குருவிடம் ஒப்படைத்து விடுகின்றான். தீயினிடம் ஒப்படைக்கப்பெற்ற விறகுத் துண் டுகள் தாம் முற்றிலும் தீயாக மாறுவதுபோல பரிபூரண நிலை எய்தியுள்ள குரு ஒருவரிடம் தன்னை முற்றிலும் ஒப் படைக் கின்ற சீடன் ஒருவன் தானும் பரிபூரண நிலைக்குத் தகுதியு டையவனாகின்றான். ஆண்கள் அட்டாங்கமாகவும் பெண்கள் பஞ்சாங்கமாகவும் கும்பிடலாம். தலை, கையிரண்டு, செவியிரண்டு, மோவாய், புயங்களிரண்டு என்னும் எட்டவயமும் நிலத்திலே பொருந் தும்படி வணங்குதல் அட்டாங்க நமஸ்காரம் ஆகும். பூமியிலே தலையை வைத்து, மார்பு பூமியிலே படும்படி வலக்கையை முன்னும் இடக்கையைப் பின்னும் நேரே நீட்டி, பின் அம்மு றையே மடக்கி, வலப்புயமும் இடப்புயமும் மண்ணிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்க நீட்டி, வலக் காதை முன்னும் இடக்காதைப் பின்னும் மண்ணிலே பொருந் தச் செய்தல் இம்முறையில் கும்பிடுதல் ஆகும். தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்தவயமும் நிலத் திலே பொருந்தும்படி வணங்குதல் பஞ்சாங்க நமஸ்காரம் என்பது. இந்த நமஸ்காரங்களை மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும், பன்னி ரண்டு தரமாயினும் பண்ணல் வேண்டும். ஒருதரம், இரு தரம் பண்ணல் குற்றம். இந்நிலையில், 'வாயொன்றும் பேசாமெளனியாய் வந்தாண்ட தேயொன்றும் போதாதோ? இன்பம் பராபரமே” - பராபரம் 131 என்று பேசுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/251&oldid=892254" இலிருந்து மீள்விக்கப்பட்டது