பக்கம்:தாயுமானவர்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 234 令 தாயுமானவர் பாவலரும் தவவேந்தன்” என்று உன்னை வழுத்தி வெற்றி யோடு காக்க என வாழ்த்துக் கூறுவர். அறிவும் அருளும் நிரம்பப் பெற்ற உனது திருமுக மண்டலத்தைப் பார்த்த அளவில் நவநாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவர். சுகர், வாமதேவர் முதலிய ஞானிகளும்’ உன்னை மதித்துப் புகழ்வர். விண்ணவரும் மன்னவரும் எதிர்வனங்கித் தொழு தற்குரிய நின் பெருமையை எடுத்துக் கூற எளிதாகுமோ?' என்கின்றார். "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று” (குறள் 22) என்ற பொய்யாமொழியும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. 3. மக்களை முறையாக ஆளும் திறமை வாய்க்கப் பெற்றவர்கள் அரசர்கள். இவர்கட்கு அடுத்தபடி இருப்பவர்கள் கவிஞர்கள். இவர்கள் சிறந்த மொழிவில் உயர் கருத்துகளை மக்களுக்கிடையில் வழங்குபவர்கள். ஒருவிதத்தில் இவர்க ளையும் அரசர்கள் என்பது பொருந்தும். இவர்கள் நாட்டின் பெருமக்கள். இந்தப் புவிராசர், கவிராசர் என்ற இருவரும் போற்றுகின்ற அரசர் தவராசன். தவத்தில் உயர்ந்த நிலைக்கு வந்துள்ள ஒருவர் புவியரசரையும், கவியரசரையும்விட மேலானவர் ஆகின்றார். தாயுமானவளின் குரு தவராசராயிருப்பது முற்றிலும் பொருத்தமானது. ஒருவிதத்தில் தாயுமானவரே இந்த மூன்றுவிதமான அடை மொழிகட்கும் தகுதியுடையவர் என்று சொல்லலாம். 4. நவநாத சித்தர்கள் என்பவர் ஒரு கூட்டத்தார். தமிழ்நாட்டில் பதினெட்டு சித்தர்கள் ஒரு காலத்தில் திகழ்ந்திருந்ததைப் போன்று இந்த நவநாத சித்தர்க ளும் முன்பு ஒரு காலத்தில் இருந்தனர். இந்த ஒன்பது பேருக்கும் ஒன்பது விதமான நாதர்கள் என்ற பெயர்கள் வழங்கின. இவர்கள் தாயுமானவரின் குருவுக்கு நெடுநாட்களுக்கு முன்னர் வாழ்ந்திருந்தவர்கள் என்றாலும் திரும்ப வும் உடல் எடுக்கும் வாய்ப்பு அவர்கட்குக் கிட்டினால் நெடுநாட்களுக்குப் பின்பு தோன்றிய இந்த திறைஞானியுடன் நட்புக் கொள்ள அவர்கள் முன்வரு வர் என்பது கருத்து. 5. நிறைஞானி என்பவர் முற்றிலும் பரம்பொருள் சொரூபமானவர். இத்தகைய ஞானிகள் ஏதோ சிற்சில காலங்களில் உலகில் தோன்றியுள்ளனர். எண்ணிக்கை யில் அவர்கள் மிகச் சிலர் எனினும் உலகில் மக்களுக்கிடையில் பெருநன் மையை விளைவிக்க வல்லவர்கள். பண்டைக் காலத்தில் தோன்றிய ஞானியர்க ளுள் கப்பிரம்மத்தையும் வாமதேவரையும் முக்கியமானவர்களாகக் குறிப்பிட 经冷懿。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/254&oldid=892257" இலிருந்து மீள்விக்கப்பட்டது