பக்கம்:தாயுமானவர்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசாரியனின் அருமை 哆 243 领 வடிவெடுத்து வருவது உடன்பாட்டு ஆணை ஆகிறது. 'இன்னதைச் செய்யாதே' என்பதுபோல் வருவது எதிர்மறை ஆணை. சாத்திரங்களுக்கெல்லாம் முதல் நூலாய் இருப்பதற் குச் சுருதி என்று பெயர். வேதாந்தத்திற்குச் சுருதி' என்பது மற்றொரு பெயர். காதால் கேட்கப் பெறுவது சுருதி. வேதம் எழுதாக் கிளவியாக இருந்து குரு சீடர்களுக்கிடையில் ஒதுதல் மூலம் பாதுகாத்து வைக்கப் பெற்றிருந்தது. பரம்பொருளிடத்திலிருந்து தோன்றியவர் பிரமன். இந் தப் பிரமன் சொல்ல அதனை மற்ற தக்க அதிகாரிகள் கேட்டுக் காப்பாற்றி வந்ததனால் வேதாந்தத்திற்குச் சுருதி (கேட்கப் பட்டது) என்ற பெயர் ஏற்பட்டது. பரம் பொருளைப் பற்றிய பேருண்மைகள் அடங்கிய நூலே வேதாந்தம். அது பரம்பொருளினிடத்திலிருந்தே வந்திருப்பதால் அது அப்பரம புருடனுக்கே உரியது என்று இயம்புவதால், தவறு ஒன்றும் இல்லை. இறைவனும், இறைவனுடைய திருநாமமும், இறை வன் ஆணையும் இணை பிரியாதவை. இறைவனே கோட்பா டுகளின் மூலம் தம்மை விளக்கிக் கொள்கின்றார். வேதாந்தம் என்னும் கோட்பாடுகளில் அழகும் நன்மையும் பொலிந்துள் ளன. ஏர்' என்ற சொல் அழகையும் நன்மையையும் குறிக்கின் றது. வேதக் கோட்பாடுகளுக்கு ஒப்ப வாழ்கின்ற வாழ்வே அழகு பொருந்திய வாழ்வு ஆகிறது. வேதக் கோட்பாடுக ளைக் கடைப்பிடிக்கின்ற பொழுதே நலன்கள் அனைத்தும் வந்து சேர்கின்றன. அவற்றைப் புறக்கணிக்கின்ற பொழுது அழகும் நலனும் அழிந்து பட்டுப் போகின்றன. இக்கருத்து களை எல்லாம் ஏரிட்ட சுருதி மொழிதப்பில் என்ற அடிகள் தம் அமுதவாக்கில் அடக்கி வைத்துள்ளார். பொது நன்மைக்கென்றும் அமைந்துள்ள சட்டதிட்டங் கட்கு இடர் அல்லது துன்பம் நேரிடுகின்றது. பொது நன் மைக்கென ஏற்பட்ட சாலைவிதிகளை மீறுகின்றவர்கள் படும் துன்பங்களை அன்றாட நாளிதழ்களில் காண்கின்றோம். இவ் விதிகளைக் கடைப்பிடித்து வருவதைக் கவனிக்கக் காவல் அதிகாரிகள் உள்ளனர். மீறுகிறவர்களுக்குத் தண்டனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/263&oldid=892267" இலிருந்து மீள்விக்கப்பட்டது