பக்கம்:தாயுமானவர்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. வழிபாட்டு முறைகள் 1. இறை வழிபாடு: இறைவழிபாடு என்பது எல்லா சமயங்களுக்கும் உரியது. வள்ளுவப் பெருந்தகையும் 'வால றிவன் நற்றாள் தொழுதலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதை நினைவு கூரலாம். தாயுமானவர் பாடல்களனைத்தும் ஏதோ ஒரு வகையில் இறைவனைச் சுட்டியிருப்பதால் இறைவழி பாட்டுப் பாடல்களேயாகும். ஈண்டு ஒரு பாடலைக் காண் போம். 'அங்கையொடு மலர்தூவி அங்கமது புளகிருப்ப அன்பினால் உருகிவிழிநீர் ஆறாக வாராத முத்தியினது ஆவேச ஆசைக் கடற்குள்மூழ்கிச் சங்கர சுயம்புவே! சம்புவே எனவும்மொழி தழுதழுத திடவனங்கும் சன்மார்க்க நெறி" - சின்மயானந்த - 1 என்ற பாடற் பகுதி வழிபாட்டு நெறியை அற்புதமாகக் காட்டுவது. நற்செயல்களைச் செய்து கொண்டிருக்கும் கை அழகிய கை. ஆண்டவனை ஆராதிப்பது நற்செயல்களிலெல்லாம் சிறந்தது. அத்தகைய கையால் இறைவன்மீது மலர் துவ வேண்டும். மலர் நமது இதயத் தாமரைக்குக் குறியீடு. அஃதா வது இதயக் கமலத்தையே ஆண்டவனிடம் சமர்ப்பிடது என்பதாகின்றது. இந்நிலையில் உடல் ஆனந்தத்தால் புளகிக் கின்றது. உள்ளமும் அன்பினால் உருகுகின்றது. கண்ணிர் ஆறாகப் பெருகுகின்றது. முக்தியின்மீது ஆசை உண்டாகின் றது. அஃது ஆவேசமாக மாறுகிறது. பேசும் மொழியும் இந்நிலையில் தழுதழுத்திருக்கின்றது. இந்நிலையில் இறை வன் திருப்பெயர்களாகிய 'சங்கரசுயம்புவே, சம்புவே என்று வாயிலிருந்து வெளி வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/267&oldid=892271" இலிருந்து மீள்விக்கப்பட்டது