பக்கம்:தாயுமானவர்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哆 250 多 தாயுமானவர் வகை உபசாரங்களையும் முறைப்படி செய்து வழிபடுதல் கிரியை. உலகப் பொருள்களோடு ஒன்றியே பழகிவிட்ட மனம் முதலிய அந்தக்கரணங்களை அவற்றின்மீது செல்லாத வாறு அடக்கி அகத்தே நிறுத்தி சிவபெருமானைத் தியானித்த லும் அவனிடத்து அழுந்துதலுமே யோகம் என்பது. சரியை முதலிய மூன்றும் ஞானத்தை அடைவிக்கும் படிகளாகும். முத்தியாகிய பெரும் பயனுக்கு ஞானம் ஒன்றே வாயிலாகும். ஏனைய பலவும் ஞானத்தை அடைவதற்கு வழிகளே." "விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும் அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே” - பராபரம் :57 என்றமையால் நான்கு நெறிகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு டையன என்பது தெளிவாகும். சரியைத் தொண்டுகளுள் பாமாலையும் பூமாலையும் சாத்துதல் சிறந்தது. 'நாவழுத்தும் செயல்மலரோ நாள்.உதிக்கும் பொன்மலரோ தேவை.உனக்கு இன்னதென்று செப்பாய் பராபரமே” - - மேலது 247 என்பதில் அடிகள் இறைவனை நோக்கி 'உனக்குப் பாமாலை வேண்டுமா? அல்லது அன்றலர்ந்த பூக்களால் தொடுக்கப் பெற்ற பூமாலை வேண்டுமா?’ என்று வினவுவதைக் காண லாம். . சிவலிங்கப் பெருமானைப் பூசனை புரிவோர் தற்சுத்தி, இடச்சுத்தி, பொருட்சுத்தி, மந்திரச்சுத்தி, வடிவச்சுத்தி என் னும் ஐவகைச் சுத்திகள் செய்து வழிபடவேண்டும். 4. வைணவத்தில் கருமயோகம், ஞானயோகம் என்பவை பக்தி யோகத்தை விளைவிப்பதுபோல எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/270&oldid=892275" இலிருந்து மீள்விக்கப்பட்டது