பக்கம்:தாயுமானவர்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 266 多 தாயுமானவர் கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்பட்டு இனிஎன்னே உய்யும்ஆறு என்றுஎன்று எண்ணி அஞ்செழுத்தின் புனைபிடித்துக் கிடக்கின் றேனை முனைவனே முதல்அந்தம் இல்லா மல்லற் கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே' என்ற அற்புதப் பாடலின் படிவம் அடிகளாரின் தேசோமயா னந்தம் பதிகத்திலுள்ள, 'இப்பிறவி என்னும்ஒர் இருட்கடலில் மூழ்கிநான் என்னும்ஒரு மகரவாய்ப்பட்டு, இருவினை எனும்திரையின் எற்றுண்டு புற்புதம் எனக்கொங்கை வரிசைகாட்டும் துப்பு:இதழ் மடந்தையர் மயல்சண்ட மாருதச் சுயல்வந்து வந்துஅடிப்பச் சேராத ஆசையாம் கான்ஆறு வான்நதி சுரந்து என மேலும் ஆர்ப்பக் கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதிமயங்கிக் கள்ளவங் கக்காலர் வருவர்என்று அஞ்சியே கண்அருவி காட்டும்எளியேன செப்பரிய முக்தியாம் கரைசேர வுங்கருனை செய்வையோ?...” - தேசோமயானத்தம் 2 என்ற பாடலில் தென்படுவதைக் கண்டு மகிழலாம். அடிகளாரின் திருப்பாடல்களை ஆழ்ந்து கற்கும்போது அப்பெருமான் மணிவாசகரை மூன்று நிலைகளில் அநுபவித் ததாகத் தெரிகின்றது. (1) அல்லலுற்று ஆண்டவனைக் காணாது அரற்றியபோது 'தேவர் தொழும் வாதவூர்த் தேவே' (ஆகாரபுவனம் 11), புத்தர்தரை வாதில் வென்ற வாதவூர் 15. திருவா.திருச்சதகம் - 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/286&oldid=892292" இலிருந்து மீள்விக்கப்பட்டது