பக்கம்:தாயுமானவர்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் & 269 & இதனைத் தாயுமானவரும், 'உடலைப் பழித்திங்கு உணவும் கொடாமல் விடவிடவே நாடுவரோ மெய்மை" - உடல்பொய்யுறவு 34 என்பதில் எழுப்பும் வினாவில் இந்த உண்மையை உணர லாம். இந்த உண்மைத் தெளிவு இன்னும் ஆழமாக, அழுத்த மாகத் திருமந்திரத்தில் உரைக்கப் பெறுகிறது. 'உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்பிலே உத்தமன் கோயில் கொண்டான்என்று உடம்பினை யான்,இருந் தோம்புகின் றேனே" என்ற பாடலில் இதனைக் காணலாம். இதனையொட்டியே அடிகளாரும், 'அறிவில் அறியாமை அற்று அறிவாய்நின்று பிறிவுஅற ஆனந்தமயம் பெற்றுக் - குறிஅவிழ்ந்தால் அன்றைக்கு உடல்வேண்டேன். ஐயாஇவ் ஆக்கையையே என்றைக்கு வேண்டுவனே யான்” - உடல்பொய்யுறவு 33 என்று உடலை வேண்டுவர். 21 'அம்பலமாவது அகில சராசரம்' என்பர் திருமூலர். இதற்கு இயைய அடிகளாரின் அநுபவம் ஆகாரபுவனம் இன்பாகாரம் ஆக என்று காண்கிறது. (ஆகா.புவ.1) திரையற்ற நீர்போலச் சிந்தைதெளி வார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யோனே ரீ என்பர் திருமூலர். இதனையே, 20. மேலது.-2 21. மேலது ஒன்பதாம் தந்அற்புதக் கூத்து - 54 23.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/289&oldid=892295" இலிருந்து மீள்விக்கப்பட்டது