பக்கம்:தாயுமானவர்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் & 271 & 'அன்பைப் பெருக்கிஎனது ஆருயிரைக் காக்கவந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே” - மேலது 14 அன்பினால்தான் ஆண்டவனைக் காண வேண்டும் என்ற கருத்து இவற்றில் மிளிர்வதைக் காணலாம். அன்டாகிய சிவத் தைக் காண்பதற்கு அன்பைத் தவிர வேறு வழி எங்ங்னம் இருக்க முடியம்? இக்கருத்தை ஒரு முறையில் வலியுறுத்தும் பாங்கில், 'அன்பருக்கு அன்பு:ஆன மெய்யன் - ஐயன் ஆனந்த மோனன் அருள்குரு நாதன் தன்பாதம் சென்னியில் வைத்தான் - என்னைத் தானறிந் தேன்மனம் தான் இறந் தேனே' - ஆனந்தக்களிப்பு - 10 என்ற பாடல் அமைகின்றது. (ஊ) அருணகிரிநாதர் தாயுமானவர் கண்ட நெறி மோன நெறி; மோன சமரச சன்மார்க்க நெறி. மெளனகுரு மூலம் பெற்ற தீட்சையால் பெற்ற பேறு இது. இந்த மோன நிலையை அருணகிரியாரின் ஆன்மிகப் பாடல் வழிப் பெற் றுத் துய்த்தவர் தாயுமான அடிகள். "ஆசா நிகளம் துகளா கியபின் பேசா அநுபூ திபிறந்ததுவே: ' என்ற பாடலில் பேசா அநுபூதி என்ற மோனநிலையைக் குறிப்பிடுகின்றார் அருணகிரியார். இதிலும் இதுபோன்ற பல வற்றிலும் ஆழங்கால்பட்ட அடிகள், “.... சும் மாஇருந்துன் அருளைச் சாரப் பூஉலகில் வளர்அருண கிரியே மற்றைப' - ஆகாரபுவனம் 31 25. கந்தரநுபூதி - 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/291&oldid=892298" இலிருந்து மீள்விக்கப்பட்டது