பக்கம்:தாயுமானவர்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 278 哆 தாயுமானவர் என்பன போன்ற பாடல்களில் இதனைக் கண்ணுற்றுக் களிக் கலாம். ஆகார புவனத்தில் அடிகளின் பாடல் இது: 'அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே ஆரமிர்தே என்கண்ணே அரிய ஆன பொருள்.அனைத்தும் தரும்பொருளே கருனை நீங்காப் பூரணமாய் நின்றஒன்றே புனித வாழ்வே கருதரிய கருத்ததனுள் கருத்தாய் மேவிக் காலமும்தே சமும்வகுத்துக் கருவி ஆகி விரிவினையும் கூட்டிஉயிர்த் திரளை ஆட்டும் விழுப்பொருளே........ (7) இந்தப் பாடலை அடியொட்டியும் இதனை மீறியும் எடுப்பாக இராமலிங்கரின் பாடல்கள்: 'கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணிரே உகந்ததண்ணி இடைமலர்ந்த சுகந்தமன மலரே மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே(2) தனித்தனிமுக் கணிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச் சர்க்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே தனித்தநறும் தேன்பெய்து பசும்பாலும் தேங்கின் தனிப்பாலும் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி இனித்தநறு நெய்அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே...(17) இவையிரண்டும் அருள் விளக்க மாலையுள் உள்ளவை. தாயுமானவரின் பாடல் தொடக்கம் முதல் சிற் சுதோய விலாசம் வரையிலும் அடுத்து ஆகார புவனத்தின் பாடல்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/298&oldid=892305" இலிருந்து மீள்விக்கப்பட்டது