பக்கம்:தாயுமானவர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வில் திசைதிருப்பம் 哆 21 令 வீடென்று தெளிந்து புனல்போல உள்ளம் உருக அன்பு தந்ததும் நின்னுடைய பேரருளே. இன்னும் நின்னையே துணை என்ற என்னையே காக்க ஓர் எண்ணம் நினக்கு உண்டெனின், உலகம் முதலிய அசத்துத் தோன்றாது சிவ சத்தே தோன்றும் மோன நிலையே பற்றாக நிற்க அருள்வாய்' என்று வேண்டுகின்றார். அடிகள் இறைவனுக்கே தம்மைக் கொடுத்து விட்டாராத லின், தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னை" என்று மணிவாசகப் பெருமான் கூறியதுபோலவே, 'தன்னைத்தந் தென்னைத் தடுத்தாண்ட நின்கருணைக்கு என்னைக்கொண் டென்னபலன் எந்தாய் பராபரமே' என்றும், 'சிந்தை மயக்கமறச் சின்மயமாம் நின்றஉன்னைத் தந்தஉனக் கென்னையும்.நான் தந்தேன் பராபரமே' என்றும் அருளிச் செய்தனர். பிறிதோறிடத்தில், 'தன்னது என்றுரை சாற்று வனவெலாம் நின்னதுஎன்தனை நின்னிடத்தே தந்தேன்' என்று மீண்டும் எடுத்துக்காட்டுவர். மெய்யுணர்வு ஏற்பட்ட பிறகும் இடையிடையே வாச னாமலம் தோன்றுவதைக் கண்டு, அதனை அறவே ஒழிக்க விரும்பும் அடிகள், 'இந்த நிலை ஏசற்றிருக்கவென்றால், மடமை இதசத்துருவாகத் தோன்றிச் சிந்தையில் குடிகொள் கின்றதே, மலம் மாயை கன்மம் மீண்டும் திரும்பித் தொடுவ முக்காய்ச் சென்மம் ஏற்படுமோ? என மனம் யோசிக்கின்றது. ' என்று கூறி 'சிரத்தையெனும் வாள் உதவிப் பந்தமற மெய்ஞ்ஞானதீரம் தந்து என்னைப் பாதுகாத்தருளுவாய்' என்று இறைவனை வேண்டுகின்றார். 9. பரிபூரணனந்தம் - 8 10. திருவன். கோயில் திருப்.10 11. பரபரம் - 127 12. மேலது - 329 13. பொன்னை மாதரை - 2 14. பரிபூரணானந்தம் - 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/41&oldid=892327" இலிருந்து மீள்விக்கப்பட்டது