பக்கம்:தாயுமானவர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 38 令 தாயுமானவர் 'ஒன்ற தாய்ப்பல வாய், உயிர்த் திரட்கெலாம் உறுதி என்ற தாய்என்று, முள்ளதாய் எவற்றினும் இசைய நின்ற தாய்நிலை, நின்றிடும் அறிஞlஎன் நெஞ்சம் மன்ற தாய்'இன்ப வுருக்கொடு நடித்திடின் வாழ்வேன்' என்பது கலிநிலைத் துறை. இது 'மனம் மன்றம் ஆகுக' என்று வேண்டுவது. "சும்மா விருக்கச் சுகம்சுகம் என்று சுருதியெல்லாம் அம்மா! நிரந்தரம் சொல்லவும் கேட்டும், அறிவின்றியே பெம்மான் மெளனி மொழியையும் தப்பிஎன் பேதைமையால் வெம்மாயக் காட்டில் அலைந்தேன்; அந்தோlஎன் விதிவசமே' இது கட்டளைக் கலித்துறை. எல்லாம் வதிவசப்படுகின்றன என்று இயம்புவது. 'உலக மாயையி லேஎளி யேன்றனை உழல விட்டனை யே:உடை யாய்அருள் இலகு பேரின்ப வீட்டினில் என்னையும் இருத்தி வைப்பதெக் காலம்?சொ லாய்:எழில் திலக வானுதற் பைந்தொடி கண்ணினை தேக்க நாடகம் செய்தடி யார்க்கெல்லாம் அலகி லாவினை தீர்க்கத் துசங்கட்டும் அப்ப னே:அரு ளானந்தச் சோதியே' இஃது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். எனக்கு வீடு பேறு தருவது எக்காலம்? என்று இறைவனை வேண்டுவது. 18. எனக்கென் செயல் - 12 19. பாயப்புலி - 36 20. ஆசையெனும் - 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/58&oldid=892345" இலிருந்து மீள்விக்கப்பட்டது