பக்கம்:தாயுமானவர்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்களின் போக்கு 俊 & 43 & நல்லோர் உரைக்கிலோ கன்மம்முக் கியமென்று நாட்டுவேன்; கன்மம் ஒருவன் நாட்டினாலோ பழைய ஞானமுக் கியம்என்று நவிலுவேன்; வடமொழியிலே வல்லான் ஒருத்தன்வர வும்தரா விடத்திலே வந்தவா விவகரிப்பேன்; வல்லதமிழ் அறிஞர்வ்ரின் அங்ங்னே வடமொழியின் வசனங்கள் சிறிதுபுகல்வேன்; வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகைவந்த வித்தைதன் முத்திதருமோ? வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர்கணமே.”* இத்தகைய சிறப்புடன் திகழ்ந்த பெருமான் சமயச் சான் றோர் வரிசையில் நிலையான இடத்தைப் பெற்று விடுகிறார். “என்றும் இருக்க உளம்கொண்டாய்! இன்பத் தமிழுக் கிலக்கியமாய் இன்றும் இருத்தல் செய்கின்றாய் இறவாய் தமிழோ டிருப்பாய்நீ! ஒன்று பொருள்ஃதின் பமென உணர்ந்தாய் தாயு மானவனே! நின்ற பரத்து மாத்திரமோ! - நில்லா இகத்தும் நிற்பாய்நீ' என்பது பாட்டரசர் பாரதியாரின் மங்காளாசாசனம். 29. சித்தர்கணம் - 10 30. பா.பா. தனிப்பாடல்கள் - தாயுமானவர் வாழ்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/63&oldid=892351" இலிருந்து மீள்விக்கப்பட்டது