பக்கம்:தாயுமானவர்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ இறைவனின் திருக்குணங்கள் శస్త్రి 73 శ (ஆ) கூத்த வடிவம்: இறைவனது குரு வடிவத்தை அடிகள் விதந்து போற்றுவதுபோல அவனது கூத்த வடிவத் தையும் மிகுந்த ஆர்வத்துடன் துதித்துப் போற்றுவதைக் காணலாம். கருணாகரக் கடவுள் என்னும் பதிகம் முழுவதும் இத்திருவுருவத்தின் புகழ் மாலையாகும். பதிகத்தின் ஒவ் வொரு பாடலும், 'கருதரிய சிற்சபையின் ஆனந்த நிர்த்தமிடு கருணா கரக்கடவுளே’ என்ற தொடருடன் இறுவதைக் கண்டு மகிழலாம். கூத்தப்பி ரானை எப்படி ஏத்துகின்றார் தெரியுமா? "உடல்குழைய என்பெலாம் நெக்கு உருக விழிநீர்கள் ஊற்றுஎன வெதும்பிஊற்ற, ஊசிகாந் தத்தினைக் கண்டுஅணுகல் போலவே ஓர்உறவும் உன்னிஉன்னிப் படபடென நெஞ்சம் பதைத்துஉள் நடுக்குறப் பாடிஆ டிக்குதித்துப் பனிமதி முகத்திலே நிலவுஅனைய புன்னகை பரப்பிஆர்த்து ஆர்த்து எழுந்து மடல்அவிழுமச மலர்அனைய கைவிரித் துக்கூப்பி; வானேஅவ் வானில்இன்ப மழையே மழைத்தாரை வெள்ளமே நீடுழி வாழிஎன வாழ்த்தி' என்று ஏத்துகின்றார். இப்பதிகம் முழுவதும் படித்துப் படித்து அநுபவித்து அழவேண்டும். 'அழுதால் உன்னைப் பெறலாம்' என்ற மணிவாசகர் வாக்கை நினைந்து அழவேண் டும். ஞானமயமாகிய பேரவையின்கண் உயிர்கட்குப் பேரின் பம் உண்டாதற் பொருட்டுக் கூத்தியற்றுதல் அவனது கரு ணைக் கடலினாலாதலாகும் என்பதை இனிது விளக்கியருள் கின்றார். 'நீர்பூத்த வேணி நிலவுஎறிப்ப மன்றுஆடும் கார்பூத்த கண்டனையான் காணுநாள் எந்நாளே” - எந்நாள் - தெய்வ (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/93&oldid=892384" இலிருந்து மீள்விக்கப்பட்டது