பக்கம்:தாயுமானவர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனின் திருக்குணங்கள் శ 77 இ பாருளாகிய உயிர்க்கு அறிவில்லாத பொருள் வாயிலாக வரும் இன்பத்திலும் அறிவுடைப் பொருளின் இயைபால் வரும் இன்பம் சிறந்ததாகும். இதுபற்றியே புறப்பற்றினும் அகப்பற்று வலிமிக்கதாகக் கருதுவர். புறப்பற்று பொன். மண், வீடு, வாசல் போன்ற பொருள்களின்பால் உள்ள அவா; அகப்பற்று - மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர் முதலியவர்மாட்டு வைக்கும் விருப்பம். இவர்களும் பிறவிதோறும் வேறு வேறாகவே, என்றும் உயிர்க்குயிராக இலங்கும் இறைவனது தொடர்பால் வரும் இன்பமே சாலச் சிறந்ததாகும். இவ்வின்பப் பேற்றின் பொருட்டே உயிர்கள் தவம் செய்து வீடுபேறு அடையக் கருதும். உயிரினது அறிவும் விரும்பும் செயலும் இறைவனது அறிவு விருப்புச் செயல்களுக்கு அடங்கி அவற்றின் வயமாய் நிலைப்படும்பொழுது இறைவனது வரம்பிலின்பம் உயிர்க ளால் எஞ்ஞான்றும் நுகரப்படும். அதுவே சிவாதுபவம் எனப் படும். இறைவன்பால் பேரின்பமும் உண்டென்று உயிர்கள் அறியாதவிடத்து அதனைப் பெறுதற்குரிய முயற்சியில் அவை தலைப்பட மாட்டா. ஆதலின் இறைவன் இன்ட வடிவினன் என்பதை அடிகள் பன்முறை தமது திருப்பாட்லக ளில் வற்புறுத்துவாராயினர். எ-டு. சூரியர்கள் சந்திரர்கள் தோன்றாச் சுயம் சோதி (எந்நாள் - அருள் இயல்பு - 7) 'உள்ளத்தின் உள்ளே. ஊறும் சிவாநந்தம் (மேலது - ஆனந்த இயல்பு 10), ஆரணமும் காணா அகண்டிதா காரபரிபூரணம்' (மேலது பொருள் இயல்பு - 11) என்பன போன்றவை. (அ) பேரின்பத்தைப் பெற்றவர்கள் பிறிதோர் இன்பத்தையும் நாடாத வண்ணம் நிறைவான தன்மையுடையவர்கள். (எடு): 'ஆனந்த பூர்த்தியாகி (பரசிவ வணக்கம் - 1) "ஞான ஆனந்தமாம் பெரிய பொருள்' - மேலது - 2 ஆனந்தமயமான ஆதி (மேலது - 3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/97&oldid=892388" இலிருந்து மீள்விக்கப்பட்டது