பக்கம்:தாய்மை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தாய்மை

வாகும். தத்துவம் (Philosophy) என்பதன் தன்மைகளைக் காண்போம்.

கொள்கையின் அடிப்படையிலேயே சமயங்கள் மாறு பட்டன. தான் வகுத்த கொள்கைகள் பிற சமயத்த்துவங் களின் அடிப்படையில் மாறுபாடு இல்லாதவை என உணர்ந் தும், தன் தத்துவ வழியே சமயத்தை வளர்க்கலானான் மனிதன். இத் தத்துவங்கள் யாவும் சமயங்கள் தோன்றி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்தே உருவாயின எனக் கொள்ளலாம். ஒரு கடவுளை வழிபடும் சமயத்திலேயே கொள்கைகள் மாறுபட்டன. சைவ சமயத்தே வீரசைவம், காஷ்மீரச் சைவம், சித்தாந்த சைவம் எனவும் அகச்சமயம், புறச்சமயம், புறப்புறச்சமயம் எனவும் பலவகையான பிரிவுகளைக் காண்கிறோம். உயிர், உலகம், கடவுள் என்ற முப்பொருள் தத்துவ அடிப்படையிலே அமைந்த சைவ நெறியிலே சிறுசிறு கருத்து வேறுபாடுகளாலே பல பிரிவுகள் கொள்கை அளவில் பிரிந்து நிற்கின்றன. வைணவத்திலே துவைதம், அத்வைதம், விசிட்டாத்வைதம் எனவும் வடகலை, தென்கலை எனவும் பிரிவுகள் உள்ளன. கிறிஸ்தவத்திலும் புராடஸ்டண்டு, கத்தோலிக் என்னும் பிரிவுகள் உள்ளன. இஸ்லாம் மதத்திலும் நாடுதோறும் சி. ற் சி ல பி ரி வு க ள் உள் ள ன. பெளத்தமதத்தில் மகாயானம், சனயானம் போன்ற பிரிவுகள் உள்ளன. சமணத்திலும் அப்படியே. இவ்வாறு ஒரு கடவுளைப் போற்றும் சமயத்திலேயே கொள்கையால்-தத்துவத்தால் வேறுபாடு காண்கின்றோம். -

சைவசித்தாந்தத் தத்துவத்தை விளக்கும் நூல்கள் பதினான்கும் மெய் கண் ட சாத்திர நூல்களாகத் தொகுக்கப்பெற்றன. முப்பொருள் உண்மை - பதி, பசு, பாசம் என்பன-எவ்வெவ்வாறு ஒன்றற்கொன்று தொடர் புடையன: உயிர்த்தன்மை, இறையின் தன்மை, உலகு அல்லது மாயா தத்துவத்தன்மை இவைகளை வனர்க்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/104&oldid=684491" இலிருந்து மீள்விக்கப்பட்டது