பக்கம்:தாய்மை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 08 - - &தாங் மை

மொழிகள் பலவற்றின் உருவும் கருவும் உணராத அந்த நெடுந் தொலைக் காலத்தில் தமிழ் தெளிந்த இலக்கண வரம்பினை உடையதாய் இலக்கியச் செறிவுடையதாய்த் திகழ்ந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. நம் நாட்டுப் பல்வேறு மரபு வழி ச் செய் தி களும் கதைகளும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் தோன்றிற்று எனக் காட்டினும் நமக்குத் தொல்காப்பியம் காட்டும் இலக்கண நெறியைக் காட்டிலும் தொன்மையான மரபு கிடைக்க வழியில்லை. தொல்காப்பியம்’ என்ற பெயரும் அதனால்தான் அமைந்ததோ என எண்ணவும் இடம் தருகிறது. காப்பியம்’ என்பது இலக்கண நூலையும் அக்காலத்தில் குறிக்கும் போலும்! - -

- தொல்காப்பியத்துக்கு முன் நமக்கு வரையறுத்த இலக்கண நூல் காணக் கிடைக்கவில்லை என்றாலும், அத் தொல்காப்பியத்தின்வழி ஆராயின் அதற்குமுன் எத்தன்ையோ தமிழ் இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்பதும், எனவே அவற்றிற்கு முன் எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றி வாழ்ந்திருக்க வேண்டும் என்பதும் உண்மையாகக் கொள்ள வேண்டுவன். எனினும் தொல்காப்பியர் காட்டும் இலக்கணங்களுக்கு எடுத்துக் காட்டாகவும் காட்ட முடியாத வகையில் அந்த இலக்கியங் களும் அவற்றின்வழி எழுந்த இலக்கணங்களும் மறைந்து விட்டன என அறிகிறோம். தொல்காப்பிய உரைகள்ல் காட்டப்பெறும் மேற்கோள்கள் பலவும் கடைச் சங்க கால் இலங்கியங்களாகவே உள்ளனவன்றோ! ஆயினும் தொல் காப்பியர் காலத்திலும் அதற்கு முன்னும் அத்தகைய இலக்கியங்கள் இல்லையானால் அவரால் அத்தகைய வரையறுத்த் எல்லைக்குட்பட்ட இலக்கணநூல் செய்திருக்க முடியாதன்றோ? -

தொல்காப்பியம்

தொல்காப்பியம் இடைச்சங்க தனலாகவும், கடைச் சங்க நூலாகவும் கொன்னப் பெறுவது. இச்சங்கங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/110&oldid=684498" இலிருந்து மீள்விக்கப்பட்டது