பக்கம்:தாய்மை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தாய்மை


சிராமலைநாதன்எப்படித்தாயாகிஉலகுக்குஅதன் பெருமையைஉணர்த்தினான்என்பதுநாடறிந்த வரலாறு.பெற்றமகள்சூல்கொண்டுமகப்பெறுதற்குற்றவேளையில்,அவளைப்பெற்றதாய்வரமுடியாதவாறுகாவிரிவெள்ளப்பெருக்கம்தடுக்க,மருந்தும்பிறவும்கொண்டுவந்தஅந்தத்தாய்காவிரியின் வடகரையில் தங்கியிருக்க, சிராமலைநாதனே அத்தாயாகவந்து, இருந்து, மகப்பேற்றுக்குரிய மருந்துவகைகளெல்லாம்ஈந்து, காத்துக்கருணைகாட்டினான்என்பதுநாமறிந்தஒன்றல்லவாஅதனாலன்றோஅச்சிராமலைநாதன்தாயுமானவர்”எனஅழைக்கப்பெற்றார்.இந்தவிழாவினைஇன்றும்திருச்சிராப்பள்ளியில்ஐந்துநாட்கள்பெருவிழாவாகக் கொண்டாடுகிறார்களன்றோ!அவ்விறைவனை அவ்வூர்த் தலபுராணம்,


"பூரணன் பரன் பராபரன் வெள்ளியம் பொருப்பன்
காரணன் தனாந்தகன் காலனைக் கடிந்தோன்
வாரணங்தனை உரித்தவன் மறைப் பொருள் வகுத்தோன்
நாரணன்றனக் கரியவன் சிராமலை நாதன்"

எனப்பாராட்டி,அத்தகைய உணர்வார்க் குணர்வரிய ஒருத்தன் தாயாகி வந்து அருள் செய்தான் எனத் தாய்மையின் பெருமையை உலகுக்குக் காட்டுகிறது. அப்பரும் திருமலைப் பதிகத்தில் தாயுமாய் எனக்கே தலைகண்ணுமாய்’எனப்பாடுவர்.சிராமலைக் கோவையும் தாயாகி வந்தொரு பேதையைக் காத்த தனிமுதலோன்’எனப்பாராட்டுகின்றது.

இவ்வாறு ஆறறிவு படைத்த மக்களுக்கு மட்டுமா இறைவன் தாயாவன் அது எப்படி ஏற்றுக்கொள்ளப் பெறும். இறைவன் திருமுன் எவ்வுயிரும் வேறுபாடற்றனவே உயர்ந்த மனிதனாயினும் தாழ்ந்த விலங்காயினும் அவனுக்கு வேறுபாடு இல்லையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/12&oldid=1233000" இலிருந்து மீள்விக்கப்பட்டது