பக்கம்:தாய்மை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

..124 தாய்மை

தாலும் ஈண்டுள்ள அறிஞர் பலர் அவற்றை அறிவர் என்ற துணிவாலும் மேலே செல்கிறேன்.

யாப்பு

செய்யுளுக்கு உறுப்பாகிய பலவற்றையும் நாம், பிற் கால இ லக் க ண ங் களி ல் நன்கு அறிந்திருக்கிறோம். ...தொல்காப்பியர் முறையில் அவையும் பிறவும் இணைந் துள்ளன. எலும்புச் சட்டகம் போன்ற வெற்றுப் பாடல் களை யாக்கும் எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை என்பன மட்டுமன்றிப் பிறவும் பா வின் வாழ்விற்குத் தேவை என்பதைத் தொல்காப்பியர் உணர்த்துவர். மேலும் அவர்கள் காட்டும் அனைத்தையும் ஒன்றாக்கிய யாப்பு அவர் வழிப்படி பாவின் ஓர் உறுப்பாகவே அமைகின்றது. அந்த யாப்பினையும் பின்னவர் காட்டும் வகையிலன்றி, வேறு முற்றும் தெளிந்த வகையில் காட்டுகின்றார். அந்த யாப்பின் இலக்கணத்தை, -

எழுத்து முதலாஈண்டிய அடியில்

குறித்த பொருளை முடிய நாட்டல் யாப்பென மொழிய யாப்பறி புலவர் ‘

3. (செய்-78) எனக் காட்டி வெறும் உறுப்புக்களால் ஆக்கப்பெறுவதுடன், ‘குறித்த பொருளை முடிய நாட்டும் நிலையும் யாப்பில் இன்றியமையாது இருக்க வேண்டியதென வற்புறுத்துவர். இந்த உண்மையினைப் பாவினைப் ப ற் றி ப் ப ல வ ைக யி ல் ஆ ய் வு .ெ ச ய் யு ம் மேலைநாட்டுப் புலவர்கள் தெள்ளிதின் ஆ ரா ய் ந்து உணர்த்துகின்றனர். கற்பனையும் உணர்ச்சியும் அமைப்பும் எத்துணைச் சிறப்பாக அமையினும் உயிரோட்டமாகிய உள்ளுணர்விலேயிருந்து உருவாகும் பொருள் செறிவு இல்லையாயின் பா சிறக்காது என்பதைத் திட்டமாகக் காட்டுவர். தொல்காப்பியர் இந்த உண்மையினையே’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/126&oldid=684515" இலிருந்து மீள்விக்கப்பட்டது