பக்கம்:தாய்மை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தாய்மை

கின்று அறிவிக்கும் ஆகலானும் ஆசிரியம் என்பது காரணக்குறி. -

கலி : . -

சீர் பொருள். இவைகளால் எழுச்சியும் பொலிவும் கடுப் பும் உடைமைத்தாகலின் கலி’ என்பது காரணக்குறி.

வஞ்சி : -

குறளும் சிந்தும் அல்லாத அடிகளை எல்லாம் வஞ்சித்து. வருதலானும், புறகிலை வாழ்த்தும் வாயுறை வாழ்த்தும் அவையடக்கியலும் செவியறிவுறு உம் என்றிப் பொருள் களை வஞ்சித்து வருதலானும் வஞ்சி’ என்னும் திறமே போலும் வனப்பும் ஏற்புடைத்தாகலானும் வஞ்சி’ என்பது காரணக்குறி. -

(யாப். செய். சூ. 2-உரை பக். 172) இவ்வாறு வகுக்கப் பெற்ற பாடல்கள் அனைத்துமே இசையோடு பாடப் பெறுவன என்பர். பண்ணத்தி’ என்ற ஒரு வகைப் பாடலைப் பற்றியும் தொல்காப்பியர் தனி யாகவும் கூறுவர். இந்நால்வகைப் பாடலுள் கவிப்பா பெரும்பாலும் இசையொடு பொருந்திப் பாடப்பெறும் போலும். ‘கவிவெண்பாட்டு’ என்றே ஒருவகைப் பாடல் அமைந்துள்ளது. மேலும் கலி துள்ளல்” இசையொடு உயர்ந்து, நலிந்தும் ஓங்கியும் தாழ்ந்தும் இடைநிலச் சமனாகியும் செல்லும் மரபிற்று என்று கூறுமாற்றால் கலிப்பா இசையொடு பொருந்திப் பாடப் பெறுவதாகும் எனக் கொள்ளல் பொருத்தமானதாகும். இவ்வாறு இசை யொடு பொருந்திய பாடல் வகையில் மருட்பா என்று மற்றொரு வகையும் பரிபாடலும் சேர்க்கப்பெறும் போலும், அவற்றின் இலக்கணங்களையும் காணலாம்.

மருட்பா

செப்பலோசையும் அகவலோசையும் கூடியது மருட்பா என்பர். எனவே வெண்பா ஆசிரியம்.இரண்டும் இணைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/134&oldid=684524" இலிருந்து மீள்விக்கப்பட்டது