பக்கம்:தாய்மை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி 137

கொள்கை உடையவர் என்பதைத் தெளிவாகக் காட்டு கின்றன. கடவுளை முன்னிலைப்படுத்தாது போற்றும் மரபினை இவரே மற்றோரிடத்தில் புறநிலை வாழ்த்து’ என்ற வகையுள் அடக்கிக் காட்டி, ஈண்டு அத்தெய்வத்தை முன்னிலைப் படுத்திப் பரவும் வகையினைத் தெளிவாகக் காட்டுகின்றார் : இதைத் தேவபாணி என்றே குறிப்பர் நச்சினார்க்கினியர். தேவபாணியொடு பெருந்தேவ பாணியும் சிறந்திருந்ததென்பதை சூ. 146 இன் உரையால் நன்கு உணரலாம். இவர் பரணி இலக்கியத்தையும் தேவபாணி என்றே காட்டுவர். மேல் 149ஆம் சூத்திரத் துக்கு உரை காணும் போது நச்சினார்க்கினியர், f

மற்றுப் பரணியாவது காடு கெழு செல்விக்குப் பரணி காட் கூழும் துணங்கையும் கொடுத்து வழிபடுவோர் வழக்குப் பற்றியது. அது பாட்டுடைத் தலைவனைப் பெய்து கூறலிற் புறத்திணை பலவும் விராயிற்றேனும் தேவபாணியேயாம்’ - .

எனக் காட்டுவர், இதற்கு அடுத்து, தெய்வத்தைப் படர்க் கையிலும் முன்னிலையிலும் பரவுதற்குச் சான்றாகச் சிலப்பதிகார வேட்டுவ வரிப் பாடல்களை எடுத்துக் காட்டு கின்றார். இதே சூத்திரத்தின் அடிப்படையில் பின்வந்த திருவாய்மொழி, தி ரு வ ா ச க ம் முதலியவற்றையும், சிந்தாமணி, கலித்தொகை கடவுள் வாழ்த்துப் பாடல் களையும் பல்வகை எடுத்துக்காட்டுகளாக அமைக்கின்றார்.

புறநிலை வாழ்த்தினைப் பற்றிக் காட்ட நினைத்த தொல்காப்பியர்,

வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்ற புறநிலை வாழ்த்து’

(செய். சூத். 116)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/139&oldid=684529" இலிருந்து மீள்விக்கப்பட்டது