பக்கம்:தாய்மை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி 147

. இளையோர் சூடார் வளையோர் கொய்யார்

கல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி பணியாள் ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்னை முல்லையும் பூத்தியோ! ஒல்லையூர் காட்டே! - (புறம், 2421

என்று ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைப் பாடியதாக அமையும் குட்டுவன் கண்ணனார் பாட்டு அஃறிணையை முன்னிலைப் படுத்தியதாக அமைகின்றது.

ஒரு சில அகத்துறைப் பாடல்கள் பர்ணன், பாங்கன் அல்லது தலைவன் கேட்கும் வகையில் தோழி கூற்றாக, அவர்களை முன்னிறுத்தாது கூறுவது போன்று வேறு அஃறிணைப் பொருள்களை முன்னிறுத்தியோ வேறு வகையிலோ கூறுவனவாக அன்மயும். ஆயினும் எல்லாப் பாடல்களும் தம் கூற்றால் நேரிலோ மறைமுகமாகவோ கேட்போர் பயன் பெற்றுச் செயலாற்றும் வகையிலும் செம்மை நலம் பெறும் வகையிலும் அமைந்துள்ளமையை அறிய முடிகிறதன்றோ!

அகவற்பாக்களால் அமையும் எட்டுத் தொகை நூல் களுள் அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு போன்ற தொகைகள் போகப் புறம்பாடும் பதிற்றுப் பத்து ஒரே மரபில் வாழ்ந்த அரசர்களை முன்னிறுத்திப் பாடுவனவாகவும் அவர்தம் வென்றி, கொடைநலம் முதலியவற்றை விளக்குவனவாகவும் அமைகின்றன. பரணர், கபிலர், அரிசில்கிழார் போன்ற பெரும் புலவர்கள் பாட்டின் அடிப்படைத் தன்மையும் மரபும் கெடா வகையில் பாடி, அகவும் வகையில் அம்மன்னர்களை விளித்து, அவர்தம் புகழ் காட்டி, அவர்கள் எவ்வாறு, வாழ வேண்டும் எனவும் வற்புறுத்துகின்றனர். இவை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/149&oldid=684540" இலிருந்து மீள்விக்கப்பட்டது