பக்கம்:தாய்மை.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தாய்மை

அம்ைவனவாகக் காண்கிறோம். எந்தத் தனிமனிதனையும் மிகப்பெருந் தலைவனாக்கி -அவனின்றேல் அவனியில்லை என்ற தனித்தலைமை காட்டிக் காவியமோ பெரும் பாட்டோ பாடும் மரபு அக்காலத்தில் இல்லை என்பது தேற்ற்ம். நல்லவரை நல்லவர் என்றும், வல்லவரை வல்லவர் என்றும் வரையறுத்த எல்லையுள் நின்று பாராட்டித் தேவையாயின் அறமுரைத்தும் வாழ்த்தியும் அமையும் நெறியில் அப்பாடல்கள் செல்கின்றன. எனினும் கால வளர்ச்சியில் மக்கள் கருத்தும் மாறுவது இயற்கையன்றோ!’ தனிமனிதனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் போற்றுதலுக்குள்ளாக்குகின்றனர். அவர்களும் அவர் தம் நாடும் நகரும் நாளோலக்கமும் பிறவும்: பாராட்டிப் பேசப்பெறுகின்றன. அப்படிப்பட்டவனைப் பாடிப் பெறும் பரி சி ைன யும் பிறவற்றையும். பலபடப் பாராட்டும் நிலையினையும் காண்கின்றோம் எனவே இப பத்துப்பாட்டு அளவில் மட்டுமன்றிப் பொருளியல் தன்மையிலும் மாறுபடுகின்றது. பாவமைப் பிலும் வஞ்சியடிகளும் விரவப்பெற்று வஞ்சி நெடும்பாட்டு எனும் வகையில் அமையும் முறையினையும் காண்கின் றோம். இவ்வாறு தனிமனிதனைப் பாராட்டிப் பேசப் பாணரும் விறலியரும் கூத்தரும் பயன்படுத்தப் பெறு கின்றனர். ஆற்றுப்படை இலக்கணத்தின் அடிப்படை. யிலேயே சில பாடல்கள் எட்டுத்தொகையில் இருக்கின்றன வெனினும் அவற்றிற்கும் இந்த ஆற்றுப்படைகளுக்கும் உள்ள வேறுபாட்டைக் கற்பாரும் ஆய்வாரும் நன்கு உணர்வர். இத்தகைய திருப்பத்தின் மாற்று வழியைக் கடைப் பிடிக்கத் து ைண ய.ா க-மு. த லா வ த ா க. ஆண்டவனைப் பற்றிய திருமுருகாற்றுப்படை'யினையே அமைத்துக் கொண்டனர். தெய்வத்தை முன்னிறுத்திச் செய்யும் மாற்றங்கள் இன்றும் ஏற்றுக் கொள்ளப்படு: கின்றன. அது போன்று அன்றும் ஏற்றுக் கொள்ளப் பெற்றிருக்கும். அதை ஒட்டிய மற்றைய ஆற்றுப்படை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/154&oldid=684546" இலிருந்து மீள்விக்கப்பட்டது