பக்கம்:தாய்மை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி I55

பொருள் முற்றிய சிலப்பதிகாரம் உருவாயிற்று, மணி மேகலையும் உண்டாயிற்று.

காப்பிய வளர்ச்சி .

இக் காப்பியங்களே பி ற் கா ல ப் பெருங்காப்பியங் களுக்கும் அவற்றின் இலக்கணங்களுக்கும் நிலைக்களன் களாக அமைந்தன. பெருங்காப்பிய நிலை பேசுங்காலை’ எனத் தண்டியலங்காரம் இலக்கணம் செய்ய ஏதுவாக அமைந்தன. இவற்றில் கவிஞனுடைய கற்பனைகளும் கதைகளும் பிறவும் அதிகமாக இடம்பெறலாயின. எட்டுத் தொகைக்கும் பத்துப்பாட்டுக்கும் இருந்த இடைவெளியைக் காட்டிலும் இந்த இ ைட வெளி மிகப் பெரிதாகக் காண்கின்றது. எனினும் இக்காலத்திற்குப் பிறகு இந்த நெடுவழியைத் தமிழ் மரபில் பலர் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள் எ ன்பது இலக்கண வரலாற்றைபாட்டின் நெறியைக் காண்பார் நன்கு உணர முடிகின்றது.

இளங்கோவடிகளும் சாத்தனாரும் தத்தம் காப்பியங் களைப் புதுமுறையில் நாட்டில் உலவ விட்டனரேனும் இருவரும் தத்தம் கதைகளுக்குள் சிற்சில உண்மைகளைப் புகுத்திப் பாடியுள்ளனர். .ெ பா ரு ள் அடிப்படையில் அமைந்தவை பாட்டு என்பது அவர்தம் வாக்கிலும் ஒரளவு மங்கி விடாமல் காப்பாற்றப் பெறுகின்ற காரணமே அவற்றை ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண் டு க ள் கழித்தும் வாழ வைக்கின்றது.

சிலப்பதிகாரப் பாயிரம் பாடியவர் யாவராயினும் அதில், அவர் இளங்கோவடிகள் அக்கதைப் பாட்டில்காப்பியத்தில்காட்டவந்த உண்மையைத் திட்டமாக விளக்கிவிட்டார். &

‘ அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதும்

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோ ரேத்தலும் ஊழ்வினை உறுத்துவக் துட்டும் என்பதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/157&oldid=684549" இலிருந்து மீள்விக்கப்பட்டது