பக்கம்:தாய்மை.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி 157

சிலம்பின் காலத்தில் மீண்டும் தலைதூக்கி நின்றது எனலாம். இளங்கோவடிகள் காட்டிய அந்த இன்னிசைப் பாடல் நெறி இன்றளவும் வளர்ந்து வாழ்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியது. நாடகச் செய்யுளாகிய பாட்டும் மடையும் வஞ்சிப் பாட்டும் மோதிரப்பாட்டும் கடகண்டும்” எனப் பேராசிரியர் பண்ணத்திக்கு உதாரணம் காட்டுவ ரேனும் அவற்றுள் ஒன்றையும் நாம் பெற்றோமில்லை. அதில் வரும் நாடகச் செய்யுளாகிய பாட்டும் மடையுமே” சிலம்பில் நாம் காண்பன. எனவே சிலப்பதிகாரம் நாம் முன்னே கண்டபடி வாழ்வின் அடிப்படை உண்மை களை விளக்குவதோடு அமையாது, தமிழ்ப் பாநலத்தின் வழக்கிலும் மரபிலும் இருந்து மறைந்த ஒருவகைப் பாட்டின் சிறப்பினைப் புதுப்பித்து நலந்தருகின்றது என்ப தையும் உணர வேண்டும். நாடகச் செய்யுளாகிய பாட்டே நாம் மேலே காட்டிய வரியும் குரவையும். மடை யென்பதைச் சிலம்பே உரைப்பாட்டு மடை என்று காட்டும் இடையிடைப்பட்ட உரைகளால் நமக்கு விளக்கு கின்றது. இவ்வாறு சிலப்பதிகாரம் பண்ணத்தியை யன்றித் தொல்காப்பியர் காலத்தில் வாழ்ந்து இடையில் ஒளிந்து நின்ற உரைநடையையும் புதுப்பித்தது என்பது உணரற் பாலது. அச்சிலம்பு ஒலித்த ஒலி வழியே உரையும் பாட்டும் அன்றுதொட்டு இன்றுவரை தமிழ் மரபு கெடா வகையில் வளர்ந்து வருகின்றதென்பதை இலக்கிய, மொழி, பாநல வரலாறு காட்டுகின்றது. இனியும் வளரும் என்பது தேற்றம். .

இக் காப்பியங்களாகிய சிலம்பு, மேகலை தோன்றிய காலத்துக்குப் பின் எத்தனையோ வேற்று நாட்டு அரசுகள் தமிழகத்தில் வந்து கலந்து வாழ்வும் வளமும் மரபும் மாண்பும் பண்பும் பிறவும் நிலைகெட, அவற்றின் அடிப் படையில் பழந்தமிழ்ப் பாநலத்திலும் மரபுநிலை திரிந்து மாற்று நிலைகள் பல இடம்பெற்றன. எனவே பண்டைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/159&oldid=684551" இலிருந்து மீள்விக்கப்பட்டது