பக்கம்:தாய்மை.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1:64 தாய்மை

ஒட்டியே மொழிமரபில் அவ்வெழுத்துக்கள் மொழிகளில்சொற்களில் பயிலும் மரபினை விளக்குகிறார். நூன் மரபின் வழியே மொழி மரபு என உரை கண்ட நல்லவர்களும் உணர்த்துகின்றனர். மொழிகளுக்கு எழுத்தான் வரும் மரபு உணர்த்தினமையின் மொழிமரபு எனப் பட்டது’ என்பர் இளம்பூரணர். இந்த இயலிலுள்ள எழுத்துக்கள் மொழிகளுள் பயின்றுவரும் மரபினையும் அப்போது உண்டாகும் ஒலி, உரு மாற்றங்களையும் அவற்றின் இயக்கம் முதலியவற்றையும் அவ்வெழுத்துக்கள் பயின்றுவரும் இடங்களையும் மரபுகெடா நிலையில் சுட்டிக் காட்டி அம் மரபினைக் காக்க வேண்டிய இன்றியமையாமையினையும் வற்புறுத்துகிறார். பின் பிறப்பியல், புணரியல் கூறி, அவற்றொடு சார்புடைய நிலையிலும் பின் சார்ந்து வரும் நிலையிலும் உள்ள அனைத்தையும் தொகுத்து, மரபுப் படுத்திக் காட்டு கின்றார். பின் நூலின் இறுதியில் ம்ரபியல் என்றே பகுதிப் படுத்தி, அதில் பெயர் மரபுகளையும், நூல், அதன் தன்மை களையும், பிற மரபுகளையும் விளக்கி, மரபு நெறியாகிய வழக்கு இது எனக்காட்டி, அம்மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்’ என எச்சரிக்கையும் விடுத்து, அம்மரபுநிலை திரியா வகையிலே மாட்சிமையுடன் உரைக்கப்படுவதே நூல் எனக் காட்டி, அந்நூல் அமைய வேண்டிய மரபினையும் இறுதியில் சுட்டி, நூல் மரபு என முதலில் தொடங்கிய அந்த முதலொடு ஈற்றினையும் பிணைத்துத் தம் நூலை முடிக்கின்றார். இவ்வாறு தொல்காப்பிய நூல் முழுதும் மரபுகெடாத எழுத்து, சொல், தொகை, மொழி, வாழ்க்கை ஆகியவற்றையே விளக்கி, அவை என்றும் கெடாத வகையில் வாழவேண்டும் என்று திட்டப்படுத்தி, நம்மை நேரிய வழியில் ஆற்றுப்படுத்துகின்றது என்பது. தேற்றம். இனி அந்நெறிகளுள் ஒரு சிலவற்றை எண்ணிம் பார்ப்போம். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/166&oldid=684559" இலிருந்து மீள்விக்கப்பட்டது