பக்கம்:தாய்மை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் மரபுநெறி

தொடரே தொல்காப்பியர் சொல் பற்றிக் கொண்ட சிறப்பியல் மரபினை உணர்த்துவதாகும். வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையின் இது கிளவியாக்க மாயிற்று’ என்பர் சேனாவரையர். அப்படியே முதல் சூத்திரத்து, உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே’ எனக்காட்டி மக்கள் வாழவேண்டிய மரபு நெறியினைச் சுட்டுகிறார். மக்களென்று கருதப்படும் பொருளை ஆசிரியர் உயர்திணையென்று சொல்லுவர்’ என்று சேனாவரையரும், உயர்திணையென்று சொல்லுவர் ஆசிரியர் மக்களென்று சுட்டப்படு பொருளை:” என இளம்பூரணரும் கூறுவர். மேலும் சேனாவரையர் “சண்டு. மக்களென்றது மக்களென்னும் உணர்வை’ எனக் காட்டி யிருப்பதும் எண்ணத்தக்கது. எனவே புற உறுப்புக்களோடு பிறந்தவர் அனைவரும் மக்களெனவும் அதனால் உயர் திணை எனவும் எண்ணப்படத்தக்கவர் அல்லர் என்ற உண்மையான மக்கள் மரபினை இதுகாட்டுகின்றதன்றோ?

மக்கள் வாழ்வில் சொல்லுதலும் கேட்டறிதலும்தான் பேச்சு வழக்கில் நிகழ்வன. அவற்றின் செம்மையை எண்ணிய தொல்காப்பியர், செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்’ (கிளவி 13) என்று வரையறுக்கிறார். செப் பென்பது வினாய பொருளை அறிவுறுப்பது வினா என்பது அறியலுறவு வெளிப்படுவது என விளக்கம் தருகிறார் சேனாவரையர். இவ்விரண்டிலும் எத்தகைய வழுவும்-குற்றமும் வராமல் காக்கும் மரபினை ஈண்டு ஆசிரியர் வற்புறுத்துகின்றார். தனி ம னி த னி ன் போராட்டமும் சமுதாயப் போராட்டமும் நாடுகளுக்குள் நடைபெறும் போர்களும் இந்த மரபுநெறியைக் காக்காத காரணத்தினாலேயே உண்டாகின்றன. இதை எண்ணித் தான் வள்ளுவர், யோகாவாராயினும் நாகாக்க” என்று விளக்கிக் கூறினார். இம்மரபின் அடிப்படையிலேதான் இக் கிளவிய்ாகத்தின் 5ே-ஆம் குத்திரமும் (எப்பொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/171&oldid=684565" இலிருந்து மீள்விக்கப்பட்டது