பக்கம்:தாய்மை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 தாய்மை

ளாயினும்) எழுதப் பெற்றது எனக் கொள்ளல் வேண்டும்: இம் மரபு உலகறி மரபாதலின் இதை இந்த அளவோடு நிறுத்தி மேலே செல்லலாம்.

தொல்காப்பியர் சில மரபுநெறிகளைச் சாதாரண மக்களும் அறிந்துகொள்ள விரித்துரைக்கும் இடங்களும் உண்டு. ஆக்கந் தானே காரண முதற்றே (கிளவி, 21). என்ற சூத்திர உரையில் சேனாவரையர் இந்த உண்மை யினை விளக்குகிறார். இச்சூத்திரத்தின் இன்றியமையா நிலையினை விளக்கி, இறுதியாக நுண்ணுணர்வுடை. பார்க்கும் தம் மரபினவே (11) என அடங்குவ வாயினும், ஏனை உணர்வினார்க்கு இவ்வேறுபாடு உணரலாகாவை: பின் விரித்துக் கூறினார்’ எனக் காட்டுவர். இவ்வாறு: எல்லாரும் புரிந்துகொள்ளும் வகையில் தொல்காப்பியர் சுட்டும் மரபு நெறிகள் பல. இச்சூத்திர உரையில் காரண முதற்றாகக் காட்டவேண்டிய இன்றியமையாத், தன்மையினை உரையாசிரியர்கள் சுட்டித் தொல்காப்பியர் தம் மரபு வழுவா நெறியினை விளக்குகின்றனர் என்பது அவரவர் உரை வழியே நன்கு .

பின் ஒரியல் விளிமரபு” என்றே அமைக்கப் பெற்றுள்ளது. ம ற் ற வ ற் று ள் ள வு ம் மரபு நெறிகள் உள்ளனவே; அவற்றை விடுத்து இதை மட்டும் விளி மரபு” எனக் கொள்வானேன்? என்று எண்ண இடமுண்டு; மற்ற வேற்றுமைகள் சொல்லோடு, சொல்லுவானோடு அமைய இது முன் நிற்பவனையும் உளப்படுத்துகிறது. எனவே விளக்கும்வகை எச்சரிக்கையாக-மரபு நிலை கெடாத வகையில் அமைய வேண்டுமல்லவா! :டே! பையா! இதைச் செய்’ என்றால் எவனும் நம் சொல்லைக் கேட்க மாட்டான்; மாறாகச் சாடுவான். தம்பி! இங்கே வா! இதைச் செய்’ என்றால் விருப்பமில்லாதவனும் மனந் திருந்தி இட்ட பணியினைச் செய்வான். இது எதனால்? முன்னது விளி மரபினைப் போற்றாததால், பின்னது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/172&oldid=684566" இலிருந்து மீள்விக்கப்பட்டது