பக்கம்:தாய்மை.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 தாய்மை

என்று ஏன் கூறுகிறாய்? ஆக, உயிர் என்பதும் உடல் என்பதும் உன்னில் வேறுபட்டன என்று சொல்லு கிறார். உ ட லு க் கு அ மு தா ல், யார் அந்த உடலைச் சுடுகாட்டில் கொண்டு கொளுத்துகிறார். நீதானே! உண்மையான பாசம் உன்னிடத்தில்லை. உயிர் எனில், நீ எப்போதாவது அந்த உயிரைப் பார்த்திருக் கிறாயா? என்று கேட்கிறார். எனினும் உடலிலிருந்து ஒன்று பிரிந்ததனலேயே அது பிணமாயிற்று அல்லவா?.

“ உற்றதை உணரும் உடலுயிர் வாழ்வுழி மற்றைய உடம்பே மன்னுயிர் நீங்கிடின் தடிந்து எரியூட்டினும் தானுணராது எனில் உடம்பிடைப் போனது ஒன்று உண்டு என உணர்நீ ‘ என்று கூறி முடிக்கிறார்.

இப்படிச் சாதுவன் கதையைச் சொல்கின்ற பொழுது வினையைக் காட்டி இந்த ஆடம்பர வாழ்க்கை வேண்டா மென்று ஒதுக்கி நல்ல படியே வாழ வேண்டும் என்பதை வற்புறுத்துகிறார். கப்பல் உடைந்து விட்டது; கணவன் இறந்து விட்டான் என்று எண்ணுகிறாள் ஆதிரை. தீயிடை மூழ்குகிறாள். தீ அவளைச் சுடவில்லை. தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன். ‘ என்று கூறி அவ்வளவு பாவம் பண்ணி விட்டேன்’ என வேதனைப் படுகின்றாள். அப்போது வான் வழிச் செய்தி “உன் கணவன் இறந்து விடவில்லை; இன்னும் சில நாட்களில் வந்து விடுவான், என்று கூறுகிறது.

நீராடி வெளியே வருபவள் போன்று ஆதிரை தீயினிடையினின்று வெளி வந்ததைக் கூறவந்தவர் பொய்கை புக்காடிப் போதுவாள் போன்று வந்தாள்’ என்று அ ழ கா. க ச் .ெ சா ல் கி றார். இங்கே சாத்தனார் கற்பின் சிறப்பை அறிவுறுத்த வேண்டும் என்பதற்காக மணிமேகலையோடு கூடவே, அவளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/208&oldid=684605" இலிருந்து மீள்விக்கப்பட்டது