பக்கம்:தாய்மை.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...210 தாய்மை

-யில் மனிதராவார்கள். மனப்பாட்டறம் பெற்றவர்களா வார்கள். அந்த நிலை நமக்கு வேண்டும் என்றுதான் சாத்தனார் மணிமேகலை வாயிலாக நமக்குச் சொல் கிறார். நான் கூறிய பல அடிகளில் மணிமேகல்ை வாக்கான அடிகளும் உள; அவர்களை ஆற்றுப் படுத்திய அறவண அடிகள் வாக்காகவும் உள.

ஒரு மனிதனுக்கு உண்டி, உடை, உறையுள் இவை .மூன்றும் தேவை. உண்பதற்கு உணவு, உடுத்த உடை, இருப்பதற்கு இடம் இம்மூன்றுக்கும் மேல் வைத்திருப்பவன் ..மகா து ரோ கி யா வா ன். தேவைக்கு அதிகமாகப் பொருளை வைத்திருப்பது குற்றம் என்று என்றைக்குச் சட்டம் வருகிறதோ அன்றுதான் நாம் சீர்ப்படுவோம்; நாடு

சீர்ப்படும்; உலகம் உயரும். அண்தத்தான்,

“ அல்லல் மாக்கட்கு இல்லது கிரப்புகர்

திருந்தேர் எல்வளை! செல்லுலகு அறிந்தோர் வருந்தி வந்தோர் அரும்பசி களைக்தோர் ‘’

என்றார். மோட்சத்திற்குப் போவோர். யாரென்றால் வருந்தி வந்தவரின் அரும்பசி களைந்தோராவர்.

துன்பம் நீக்கும் துணிபொருள் உணர்ந்தோர்

மன்பதைக் கெல்லாம் அன்புடையார் :

என்றார் சாத்தனார். .

‘’ இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே உள என்பது குறள்.

தருமத்தைச் செய். ஆனால் நீ செய்தது யாருக்கும் தெரியக்கூடாது. அதுவே மனப்பாட்டறம். மணிமேகலை தான் செய்ததாக எங்கும் பறைசாற்றவே இல்லை, ஒருங்கு இருந்த சாத்தனாரும் இளங்கோவடிகளும், கண்ட காரணத்தினாலே, நாம் செய்த பேற்றினாலே அவர்கள் உ டனே எ ழு தி வைத் து வி ட் டா ர் க ள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/212&oldid=684762" இலிருந்து மீள்விக்கப்பட்டது