பக்கம்:தாய்மை.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலை w 211

எத்தனையோ நல்லவர்களுடைய பல வரலாறுகள் நல்லவர் உடனிருந்து எழுதாத காரணத்தினாலே மறைந்து விட்டதைக் காண்கிறோம்.

இனி, பல பிறவிகளைப் பற்றி முழுக்க முழுக்க நம்பு கிறார் சாத்தனார். மணிமேகலையில் மாதவி, சுதமதி, மணிமேகலை ஆகிய எல்லோரும் முன்பிறவியில் சகோதரி களாக இருந்தார்கள் என்று கூறுகிறார். மணிமேகலை அரசகுமரனைக் கருதியதற்குக் காரணம் முந்தைப் பிறவியே என்றுதான் சொல்கிறார். இளங்கோவடிகள் கூடக் கோவலன் முற்பிறவியில் கொலை செய்தான்; அதனால் இப்பிறவியில் கொலை செய்யப்பட்டான் என்று கூறுகிறார். இவர்கள் பழம் பிறப்பிலே ஆழ்ந்த நம்பிக்கை யுடையவர்கள். நாம் செய்யும் புண்ணியத்திற்கு ஏற்பப் பலன்களையெல்லாம் அனுபவித்து, கடைசியில் நிருவாணம் பெறுவார்கள் என்று பெளத்த சமணர்கள் சொல்வார்கள். நீங்கள் கடவுளைப் பற்றிக் கூடக் கவலைப்படவேண்டிய தில்லை. நீங்கள் கவலைப் படாவிட்டாலும் நீங்கள் உண்மையாக இருந்தால் அவனே ஒடி வருவான, தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான் வார் கழல்’ என்று மாணிக்க வாசகர் பாடுவது போன்று நாம் நேர்மையாக இருந்தால் இறைவனைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அவன் நம்மைத் தேடி வருவான்.

ஒரு கருத்திலே மட்டும் நான் சாத்தனாரைச் சற்றுத் தூரவே தள்ளி வைக்க வேண்டிய நிலையிலே இருக்கிறேன். இளங்கோவடிகள் சாத்தனார் இருவரும் ஒரே காலத்தவர். இருவரும் தாயும் சேயும் பற்றிப் பகர் கிறார்கள். இரண்டும் அறம் வளர்த்தவை. இளங்கோ வடிகள் செய்யாத ஒரு கொடுமையைச் சாத்தனார் செய்திருக்கிறார். அது இன்னும் நாட்டை விட்டு நீங்க வில்லை. இளங்கோவடிகள் சமணர். காட்டிலே வேட்டு வரைப் பற்றிப் பாடும்போது வேட்டுவவரி பாடுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/213&oldid=684763" இலிருந்து மீள்விக்கப்பட்டது