பக்கம்:தாய்மை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 தாய்மை



 'ஆலைநீள் கரும்பன்னவன் தாலோ
      அம்புயத் தடங்கண்ணினன் தாலோ 
  வேலைநீர் நிறத்தன்னவன் தாலோ
    வேழப் போதக மன்னவன் தாலோ 
  ஏலவார் குழல் என்மகன் தாலோ
    என்றென்றுன்னையென்வாயிடைகிறையத் 
  தாலோ லித்திடும் திருவினை இல்லாத்
     தாயரிற் கடையாயின தாயே" 

எனப் பாடும் நிலையில் தேவகி அத்திருவினை இழந்தாலும் குலசேகர் அதனைப் பாடும் முகத்தான் தன் மனமார வாயாரத் தம் தாய்மை உணர்வால் கண்ணனைத் தாலாட்டிவிட்டார்.

. திருமங்கை ஆழ்வார் ஆண்டவன் மட்டுமன்றி அவன் திருப்பெயரேதாயினும் இனிய நலம் பயப்பது எனப் பாடுவர். நாராயணா’, எனும் நாமம் நல்ல உதவி களின் உச்ச நிலையில் தாயினும் மேலான உதவியைச் செய்யும் எனக் காட்டுவர். .

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
               படுதுயராயின வெல்லாம் 
கிரந்தரம் செய்யும் நீள்வீசும்பருளும்அருளொடு
                   பெருகில மளிக்கும் வலந்தரும்மற்றும்தந்திடும்பெற்றதாயினுமாயின
                          செய்யும் கலந்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்              
                     
                   நாராயணாஎனும்நாமம்’ என்பர் அவர். இங்கே அவர் தாயைக் குறிக்கும்போது புெற்ற தாய்’ எனவே குறிக்கின்றார்; அப்பரடிகள் :ஈன்றாளும்’ எனக் குறித்த படி உண்மையில் பிள்ளைகள் அருமையைப் பெற்றவரே அறிவர். இன்று. பெறாதார் பலர் ஏதோதோ பெயர்களுடன் அரசாங்கச்சம்பளம்பெற்றுக்கடனுக்காதைகளைப்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/26&oldid=1229703" இலிருந்து மீள்விக்கப்பட்டது